தமிழ் சினிமாவில் கடந்த 1980 90களில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன். பயணங்கள் முடிவதில்லை நான் பாடும் பாடல் அம்மன் கோவில் கிழக்காலே வைதேகி காத்திருந்தாள் குங்குமச்சிமிழ் மெல்லத் திறந்தது கதவு திருமதி பழனிசாமி என ஏராளமான படங்களை அவர் டைரக்ட் செய்தவர். நிறைய படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் கூறியதாவது, நான் திருமதி பழனிச்சாமி என்ற ஒரு படம் எடுத்தேன். அதில் 1000 கோயில் கட்டறதை விட 10 ஆயிரம் பேருக்கு சாப்பாடு போடுவதை விட ஒருத்தனை படிக்க வைக்கிறது அதிக புண்ணியம் என்று வசனம் எழுதி வைத்திருந்தேன். ஆனால் இளையராஜா அதை ஒத்துக்கலை. கடவுள் இல்லாம எல்லாம் வந்துட்டதான்னு கேட்டார். அவர் படத்துக்கு இசையமைக்கவே மாட்டேன்னு சொல்லிட்டார். பிறகு அந்த வசனத்தை நான் மாற்றி வைத்தேன் என்று இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் அதில் கூறியிருக்கிறார்.
