தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார். நாட்டாமை நட்புக்காக சேரன் பாண்டியன் அவ்வை சண்முகி முத்து படையப்பா போன்ற வெற்றிப் படங்களை தந்தவர். நடிகர் அஜீத்குமார் அப்பா மகன் என 2 வேடங்களில் நடித்த வரலாறு படத்தை இயக்கியவரும் கேஎஸ் ரவிக்குமார் தான். இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
வரலாறு படம் குறித்து இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் கூறியதாவது, வரலாறு படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க எண்ணினேன். அவர் வரலாறு படம் பார்த்தபின் நடிக்க மறுத்து விட்டார். இந்த படத்தில் அஜீத்குமார் மிகவும் அருமையாக நடித்துள்ளார். தயவுசெய்து இந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்து கெடுத்து விடாதீர்கள் என்றும் பாலகிருஷ்ணா என்னிடம் கூறினார் என்று கேஎஸ் ரவிக்குமார் சமீபத்தில் பங்கேற்ற ஒரு நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
