திமுக இளைஞரணி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் காங்கிரசுக்கு எதிராகப் பேசியதைத் தொடர்ந்து, விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தேர்தல் முடிவுகளின் போது எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க உதயநிதி துள்ளிக் குதித்து சம்மதித்தார் என்றும், பாஜக தலைவர் மூலமாக திமுக-அதிமுக கூட்டணி அமைக்க முயன்றனர் என்றும் அவர் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
இந்த நிலையில், மாணிக்கம் தாகூர் கூறுவது அப்பட்டமான பொய் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ்காரர்கள் நன்றி கெட்டவர்கள் என்று சாடிய அவர், தேர்தல் முடிவுகள் வந்த பின்பு காங்கிரசாரைத் தவிர மற்ற அனைவரும் மு.க.ஸ்டாலினை வந்து சந்தித்ததாகவும், தொலைபேசியில் கூட நன்றி தெரிவிக்காமல் சென்றவர்கள் காங்கிரஸ் கட்சியினர் என்றும் அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
