“நாங்கள் காங்கிரஸை டைவர்ஸ் பண்ணிட்டோம்” – ப.சிதம்பரத்தின் கருத்துக்கு ஆர்.எஸ்.பாரதி அதிரடி பதிலடி..!!

By Soundarya on ஆனி 7, 2026

Spread the love

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனியார் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் வெளியிட்ட கருத்துகளுக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணி தொடர்ந்து நீடிப்பதாக ப.சிதம்பரம் குறிப்பிட்டிருந்த நிலையில், அதற்கு முற்றிலும் மாறான கருத்தை ஆர்.எஸ்.பாரதி முன்வைத்துள்ளார். “திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது என்று ப.சிதம்பரம் கூறியிருந்தாலும், நாங்கள் காங்கிரஸ் கூட்டணியை டைவர்ஸ் (விவாகரத்து) பண்ணிட்டோம்” என்று ஆர்.எஸ்.பாரதி பகிரங்கமாகத் தெரிவித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்

மேலும் இந்த விவாகரத்து குறித்து விளக்கிய ஆர்.எஸ்.பாரதி, தங்களை விட்டுச் சென்ற மற்ற சில கட்சிகள் தங்களுடன் முறைப்படி ஆலோசனை செய்துவிட்டே பிரிந்து சென்றதாகவும், அது ஒரு தனித்துவமான விவாகரத்து முறை என்றும் குறிப்பிட்டார். ஆனால், தற்பொழுது காங்கிரஸுடன் ஏற்பட்டுள்ள விவாகரத்து என்பது முற்றிலும் மாறுபட்ட, வேறு வகையான ஒரு பிரிவு என்றும் அவர் விவரித்துள்ளார். இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீடு அல்லது கொள்கை ரீதியாக நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் தற்பொழுது பகிரங்கமான கூட்டணி முறிவாக வெளிவந்துள்ளதை இந்த அதிரடி அறிக்கை உறுதிப்படுத்துகிறது.