சேலையில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்த புஷ்பா பட வில்லி நடிகை.. ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..!

By Nanthini on ஏப்ரல் 4, 2025

Spread the love

ஹைதராபாத்தை சேர்ந்தவர் தான் நடிகை அனசுயா பரத்வாஜ். எம்பிஏ படித்து முடித்ததும் HR ஆக பணியாற்றி வந்த இவர் தொகுப்பாளராகவும் வேலை பார்த்து வந்தார்.

   

இதனைத் தொடர்ந்து இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கிய நிலையில் அதையெல்லாம் முதலில் இவர் ஏற்க மறுத்து விட்டார்.

   

 

இதனைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு சுஷாந்த் பரத்வாஜ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் வளர்ந்த பிறகு மீண்டும் சின்னத்திரை நிகழ்ச்சியில் இவர் தொகுப்பாளராக களம் இறங்கினார்.

அதன்படி இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக ஏற்படுத்திய நிகழ்ச்சி என்றால் அது ஜபர்தஸ்த் தான். காமெடி நிகழ்ச்சியான இதில் இவர் தொகுப்பாளராக மட்டுமல்லாமல் அதில் கவர்ச்சி நடனமாடி இவர் கொடுக்கும் என்ட்ரிக்காகவே அந்த நிகழ்ச்சியை ஏராளமான ரசிகர்கள் பார்த்தனர்.

இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த வரவேற்பு காரணமாக இவரை சினிமாவில் நடிக்க வைக்கவும் இயக்குனர்கள் படையெடுத்த நிலையில் இதற்கு கணவரும் ஓகே சொன்னதை தொடர்ந்து சினிமாவிற்குள் நடிகையாக காலடி எடுத்து வைத்தார்.

முதல் படமே நாகார்ஜுனா உடன் நடித்த இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது சுகுமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ரங்கஸ்தலம் என்ற திரைப்படம் தான்.

இந்தத் திரைப்படத்திற்காக இவருக்கு ஏராளமான விருதுகளும் கிடைத்தது. இதனை தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்த அனசுயா, அல்லு அர்ஜுனின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான புஷ்பா திரைப்படத்தில் வில்லியாக நடித்திருந்தார்.

அடுத்ததாக பணத்தின் இரண்டாம் பாகத்திலும் இவர் தான் நடித்திருந்தார். இவர் அடிக்கடி பல சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு.

நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் படத்தை விமர்சித்ததன் காரணமாக அவருடைய ரசிகர்கள் இவரை ஆன்ட்டி என கிண்டல் அடித்தது மட்டுமல்லாமல் பல விமர்சனங்களையும் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து விஜய் தேவரை கொண்ட ரசிகர்கள் மீது சைபர் கிரைம் போலீசில் இவர் புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம் அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது.

தற்போது 40 வயதாகும் இவர் கவர்ச்சி காட்டுவதில் இளம் நடிகைகளுக்கு டப் கொடுத்து வருகின்றார். அதன்படி தற்போது சேலையில் ஓவர் கிளாமர் காட்டி அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.