நான் ஃபேமஸ் ஆகிட்டேன் அவர் வளர வேண்டும்.. இசையமைப்பாளருக்காக MGR படத்துக்கு இசையமைக்க நோ சொன்ன MSV..!

By Nanthini on சித்திரை 4, 2025

Spread the love

கடந்த 1973 ஆம் ஆண்டு எம்ஜிஆர், மஞ்சுளா, லதா மற்றும் நம்பியார் ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் உலகம் சுற்றும் வாலிபன். இந்த திரைப்படத்தை எம்ஜிஆர் தயாரித்து இயக்கி இருந்த நிலையில் இப்படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் உருவாவதற்கு முன்பு ஒருநாள் எம்எஸ்வி-ஐ தொடர்பு கொண்ட எம் ஜி ஆர், நீ எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எந்த படத்திற்கும் இதுவரை இசை அமைத்ததே கிடையாது, இப்போது நான் ஒரு புதிய படத்தை தயாரிக்கிறேன், அந்தப் படத்தின் தலைப்பு உலகம் சுற்றும் வாலிபன். அதற்கு நீதான் இசையமைக்க வேண்டும் என்று எம்ஜிஆர் கூறியுள்ளார்.

மீண்டும் திரையில் உலகம் சுற்றும் வாலிபன் - ரசிகர்கள் உற்சாகம் | Tamil  cinema ulagam sutrum valiban release in theatre

   

இதற்கு எம் எஸ்வியும் சரி என்று தலையாட்டி விட்டார். அதன் பிறகு சில நாட்கள் கழித்து ஒரு நாளிதழில் எம்ஜிஆர் இயக்க இருக்கும் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்திற்காக குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் நான்கு பாடல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று செய்தி வந்துள்ளது. இந்த செய்தியை கேட்டு குழம்பிப்போன எம் எஸ் வி, எம்ஜிஆர் அவராக தானே நம்மை இசையமைக்க சொல்லி கேட்டார் இப்போது என்ன குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைப்பதாக செய்தி வந்துள்ளது என தனக்குத்தானே பேசிக்கொண்டு உள்ளார். அதன் பிறகு சில நாட்கள் கழித்து எம்ஜிஆர் இடமிருந்து மீண்டும் தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது.

   

mgr3_cine

 

அப்போது எம்ஜிஆர் உன் மனசுல என்னதான் நெனச்சுக்கிட்டு இருக்க, உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு நீதான் இசையமைக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே சொன்னேன், நீ ஏன் ஆபீஸ் பக்கமே வரல ஒரு போன் கூட பண்ணலை என்று கேட்டுள்ளார். இதனைக் கேட்ட எம் எஸ் வி, அண்ணா நீங்க என்ன சொன்னாலும் சரி இந்த படத்துக்கு என்னால் இசையமைக்க முடியாது என்று கூறியுள்ளார். உடனே எம்ஜிஆர் ஏன் என்று கேட்க, உங்க படத்துக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைக்கிறார் என்ற செய்தியையும் ஏற்கனவே நான்கு பாடல்கள் பதிவு செய்தாகி விட்டது என்ற செய்தியையும் நான் ஒரு நாளிதழில் படித்தேன். குன்னக்குடி வைத்தியநாதன் வைத்து ஆரம்பித்த படத்தை அவரை வைத்து முடிப்பது தான் சரியானது.

mgr1_cine

நான் சினிமாவில் ஓரளவுக்கு பேரெடுத்து விட்டேன், குன்னக்குடி வைத்தியநாதன் நல்லா பண்ண கூடியவர் அவர் வளர வேண்டும் அவரை வைத்தே படம் பண்ணுங்கள். மன்னிச்சிடுங்க என்னால் இசையமைக்க முடியாது என்று கூறிவிட்டு எம்.எஸ்.வி ஃபோனை வைத்து விட்டாராம். அதன் பிறகு குன்னக்குடி வைத்தியநாதன் சந்தித்து தனது வாழ்த்துக்களை எம்ஜிஆர் கூறிய நிலையில் அதற்கு குன்னக்குடி வைத்தியநாதன், அண்ணா இந்த படத்துக்கு நீங்களே இசையமைச்சிடுங்க, இந்தப் படத்துக்கு எனக்கு என்ன சம்பளம் கொடுக்கணும் அதை முழுசா எம்ஜிஆர் எனக்கு கொடுத்தார். தனது அடுத்த படத்தில் எனக்கு சான்ஸ் தருவதாகவும் எம்ஜிஆர் கூறியுள்ளார், அதனால் நீங்க இசையமைப்பது தான் எனக்கு சந்தோசம் என்று அவர் கூறிய நிலையில் இறுதியாக உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு எம் எஸ் வி தான் இசையமைத்தார்.