தென்னிந்திய சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் நிற்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் புஷ்பா 2. ஷ்பா தி ரூல் படத்தின் முதல் பார்வை இந்த ஆண்டு வெளியானதில் இருந்தே படம் குறித்து பார்வையாளர்கள் மனதில் அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்தத் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. புஷ்பா முதல் பாகம் வெற்றியை தொடர்ந்து தற்போது 2ம் பாகம் மாஸாக தயாராகி டிசம்பர் 5 வெளியாகிவிட்டது.
படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. புஷ்பா முந்தைய பாகத்தில் கூலி தொழிலாளியாக இருந்து படிப்படியாக உயர்ந்து அந்த காட்டுக்கு ராஜா வாகி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பும், பகத் பாஸில் புஷ்பாவுக்கும் இடையிலான மோதல் எப்படி இருக்கும் என்பதையும் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள். முதல் பாகத்தில் இவர்களுடைய நடிப்பை பார்த்து வியந்த ரசிகர்கள் இரண்டாம் பாகத்திற்காக காத்திருந்தனர்.
அது வீண் போகவில்லை என்பது போல ஒவ்வொரு நடிகரும் அவர்களுடைய பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்கள். படம் ஒட்டுமொத்தமாக குறிப்பாக கடந்த 5ம் தேதி வெளியான இப்படம், இந்தியாவில் மட்டும் 164 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இந்த படம் முதல் நாளில் மட்டுமே 294 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது.
படம் இரண்டாவது நாளில் ரூபாய் 449 கோடிகள் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படம் வெளியாகி இன்றுடன் அதாவது டிசம்பர் 8ஆம் தேதியுடன் நான்கு நாட்கள் ஆகும் நிலையில், முதல் மூன்று நாள் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கிட்டத்தட்ட ரூபாய் 600 கோடிகளை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய சினிமாவிலேயே மூன்று நாளில் ரூபாய் 600 கோடிகளை வசூல் செய்த படமாக புஷ்பா 2 உருவெடுத்துள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…