முக்கிய நிகழ்வுகளில் சிதறு தேங்காய் உடைப்பது ஏன்…? சாஸ்திரம் கூறுவது என்ன…?

Spread the love

இந்து மத வழிபாட்டில் தேங்காய் மிக முக்கிய இடம் பெறுகிறது. எந்த ஒரு வழிபாட்டை தொடங்குவதானாலும் தேங்காய் வைத்து உடைத்து தான் தொடங்குவார்கள். அதேபோல் முக்கிய நிகழ்வுகளில் முதலாவதாக தேங்காய் உடைப்பார்கள். சிலர் விநாயகப் பெருமானுக்கு 51 101 என்ற கணக்கில் சிதறு தேங்காய் உடைப்பார்கள். இது எதற்காக செய்கிறார்கள் இதனால் என்ன நன்மை கிடைக்கிறது என்பதை பற்றி இனி காண்போம்.

முதலாவதாக கண்திருஷ்டி போக்குவதற்கு சிதறு தேங்காய்டைப்பார்கள். குடும்பத்தில் கண் திருஷ்டி காரணமாக ஏதேனும் சங்கடங்கள் நடந்து கொண்டே இருந்தால் குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் அல்லது குடும்பத்தில் உள்ள அனைவரின் தலையையும் தேங்காயால் சுற்றி உடைப்பார்கள். இதனால் கண்திருஷ்டி விகும் என்பது ஐதீகம்.

அதேபோல எந்த ஒரு சுப காரியங்களுக்கு வெளியே கிளம்பும்போது கோவில்கள் சபரிமலை அல்லது வேறு எந்த கோயில்களுக்கு செல்லும்போது தடையில்லாமல் சென்று வீடு திரும்ப வேண்டும் என்பதற்காக சிதறு தேங்காயை உடைப்பார்கள். இது மட்டுமில்லாமல் வீடு கிரகப்பிரவேசம் புதிய தொழில் தொடங்குதல் போன்றவற்றிற்கு முன்பாகவும் சிலர் தேங்காய் உடைப்பார்கள்.

விநாயகப் பெருமானுக்கு வேண்டுதல் வைத்து சிலர் தேங்காய் உடைக்கிறேன் என்று வேண்டி இருப்பவர்கள் அந்த வேண்டிய காரியம் நிறைவேறிய பிறகு சிதறு தேங்காய் உடைப்பார்கள். மற்றொரு காரணமாக கூறப்படுவது வாழ்வில் வரக்கூடிய கஷ்டங்கள் எல்லாம் இந்த சிதறு தேங்காயை போல் சிதறி தூள் தூளாகி விட வேண்டும் என்ற நோக்கத்தில் சிதறு தேங்காய் உடைப்பதும் உண்டு.

ஏதேனும் தோஷம் இருந்தாலோ கிரக நிலைகள் சரியாக அமையாமல் இருந்தாலோ காரியத்தடை போன்றவைகள் நடந்திருந்தாலோ அதற்கு பரிகாரமாக சிதறு தேங்காய் உடைக்க சொல்வார்கள். மொத்தத்தில் நம்மை பிடித்து இருக்கும் கஷ்டம் பீடை அனைத்தும் நம்மை விட்டு தொலைய வேண்டும் என்பதே இந்த சிதறு தேங்காய் உடைப்பதின் நோக்கமாகும்.

admin

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

9 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

9 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

9 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

9 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

9 மணத்தியாலங்கள் ago