இந்திய சினிமா வரலாற்றில் இதுவே முதல்முறை… நான்கே நாட்களில் வசூலில் தலைசுற்ற வைத்த புஷ்பா-2..!

By Soundarya on மார்கழி 9, 2024

Spread the love

இயக்குனர் சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் புஷ்பா 2. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளார்கள். புஷ்பா தி ரூல் படத்தின் முதல் பார்வை இந்த ஆண்டு வெளியானதில் இருந்தே படம் குறித்து பார்வையாளர்கள் மனதில் அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்தத் திரைப்படம்  உலகம் முழுவதும் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. புஷ்பா முதல் பாகம் வெற்றியை தொடர்ந்து தற்போது 2ம் பாகம் மாஸாக தயாராகி டிசம்பர் 5 வெளியாகிவிட்டது.

   

படம் கலவையான  விமர்சனங்களை பெற்று வருகிறது. புஷ்பா முந்தைய பாகத்தில் கூலி தொழிலாளியாக இருந்து படிப்படியாக உயர்ந்து அந்த காட்டுக்கு ராஜா வாகி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பும், பகத் பாஸில் புஷ்பாவுக்கும் இடையிலான மோதல் எப்படி இருக்கும் என்பதையும் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.

   

 

முதல் பாகத்தில் இவர்களுடைய நடிப்பை பார்த்து வியந்த ரசிகர்கள் இரண்டாம் பாகத்திற்காக காத்திருந்தனர்.அது வீண் போகவில்லை என்பது போல ஒவ்வொரு நடிகரும் அவர்களுடைய பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்கள்.  படம் ஒட்டுமொத்தமாக குறிப்பாக கடந்த 5ம் தேதி வெளியான இப்படம்,  இந்தியாவில் மட்டும் 164 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்பட்டது.

Latest News Allu Arjun Pushpa 2 The Rule Box Office Collection Day 3 Starring Rashmika Mandanna Fahadh Faasil | 3 நாட்களில் பல கோடிகளை அள்ளிய புஷ்பா 2 எவ்வளவு தெரியுமா News in Tamil

இந்த நிலையில் தற்போது  நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 800 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இப்படி இந்திய சினிமாவிலேயே 4 நாட்களில் ரூ.800 கோடிக்கும் மேல் வசூல் செய்த முதல் திரைப்படம் இது தான். மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் ரூ. 1000 கோடியை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.