தளபதியை போல சைக்கிளில் வந்து ஓட்டு போட்ட புரட்சித்தளபதி… எல்லாரும் சூனா பானா ஆயிற முடியுமா…? 

By Begam

Published on:

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தளபதியாக நீங்காத இடத்தை பிடித்தவர் தான் நடிகர் விஜய். தற்பொழுது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக இவர் கமிட் செய்த திரைப்படத்தை முடித்துவிட்டு முழுமையான அரசியலில் ஈடுபட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

   

தற்போது இவர் ‘தமிழக வெற்றி கழகம்’ என்னும் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். 2026 இல் நடைபெறும் தேர்தலில் அவர் போட்டியிடுவதாகவும், அறிவித்துள்ள விஷயம் தான் நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டு  வந்தது. அரசியலில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக சினிமாவிலிருந்தும் விலகப் போவதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் தளபதி விஜய்க்கு போட்டியாக எப்பொழுதும் ஏதாவது ஒரு விஷயத்தை செய்பவர் நடிகர் விஷால். விஜய் தளபதி -னா  நான் புரட்சித் தளபதி என தொடங்கி இந்த போட்டி சமீபத்தில் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பொழுது அவருக்கு போட்டியாக விஷாலும் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்தார்.  இந்நிலையில் இன்று நாடு முழுவதும் மக்கள் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

பிரபலங்கள் பலரும் வாக்களித்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்பொழுது நடிகர் விஷால் நடிகர் விஜயை போன்று சைக்கிளில் சென்று இன்று வாக்களித்துள்ளார். அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலன்று நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தார். இதை அப்படியே நடிகர் விஷால் தற்பொழுது காப்பி நடித்துள்ளதாக ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Galatta Media (@galattadotcom)