அய்யோ யாராவது காப்பாத்துங்க… கண்டெய்னர் லாரி கார் மோதியதால் கோர விபத்து… 7 பேர் உடல் கருகி துடிதுடித்து பலி… பகீர் கிளப்பும் வீடியோ…!

By Nanthini on கார்த்திகை 14, 2025

Spread the love

புனே மற்றும் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை ஏற்பட்ட கோர விபத்து காரணமாக அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. நவேலி பால பகுதியில் இன்று அதிகாலையில் 2 கண்டெய்னர் லாரிகளும் ஒரு காரும் எதிர்பாராத விதமாக மோதி கொண்டதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. அப்போது தீ பரவிய நிலையில் காரில் இருந்தவர்கள் உட்பட மொத்தம் ஏழு பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மோதிய வேகத்தால் கண்டெய்னர் லாரி உடனே தீப்பற்றி எறிய தொடங்கியதால் பயணிகள் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர். சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு கடுமையான போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.