“காவல் நிலையப் புகாரால் ஆத்திரம்”… 2-வது மனைவியை அடித்துக் கொன்று சொந்த நிலத்திலேயே குழி தோண்டி புதைத்த காவலர் கைது…. திடுக்கிடும் சம்பவம்…!

Spread the love

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பிலாவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (39). இவர் அரியலூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி உள்ள நிலையில், மழையூர் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த 24 வயதுடைய மௌனிகாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத் பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியது. இதில் மௌனிகா கர்ப்பமடைய, அவரைத் திருமணம் செய்ய பிரபாகரன் மறுப்பு தெரிவித்ததால், மௌனிகா காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். ஆணையரின் உத்தரவின்பேரில் பிரபாகரன் அவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு மௌனிகா தனது தாய் வீட்டிலேயே வசித்து வந்த நிலையில், அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்து தற்போது சிறுவனுக்கு 7 வயதாகிறது. இதற்கிடையில், ரேஷன் அட்டையில் குழந்தையின் பெயரைச் சேர்க்குமாறு பிரபாகரனிடம் மௌனிகா வலியுறுத்தியுள்ளார். ஆனால், அவர் இதில் ஈடுபாடு காட்டாததால், மௌனிகா மீண்டும் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இதன் காரணமாகப் பிரபாகரன் பணியிடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இது போன்ற பிரச்சினைகளால் உயர் அதிகாரிகளின் கண்டனத்திற்கு ஆளான பிரபாகருக்கு, மௌனிகா மீண்டும் புகார் அளித்தது ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இரண்டாவது மனைவியான மௌனிகாவை தீர்த்துக்கட்ட திட்டமிட்ட பிரபாகரன், கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அவரை அரியலூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் தங்கியிருந்த நிலையில், அக்டோபர் 9ஆம் தேதி பிரபாகருக்குக் காய்ச்சல் ஏற்பட்டதாக நாடகமாடியுள்ளார். பின்னர், மறுநாள் மௌனிகாவை அழைத்துக் கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பிய அவர், திடீரென மௌனிகா மாயமானதாகக் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மௌனிகாவின் பெற்றோர் மழையூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, காவலர் பிரபாகரனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பிரபாகரனுக்கு சொந்தமான நிலத்திற்கு அருகிலுள்ள பட்டா இல்லாத நிலத்தில் மௌனிகாவின் உடல் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குடும்பத் தகராறு காரணமாக மனைவியை அடித்துக் கொன்று, குழி தோண்டிப் புதைத்ததாகப் பிரபாகரன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், அவர் காட்டிய இடத்தில் குழி தோண்டி மௌனிகாவின் உடலை முழுமையாக மீட்டுத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Nanthini

Recent Posts

அடே… உன் வீட்டுப் பெண்ணா இருந்தா இப்படித்தான் பேசுவியா?… தனியார் பஸ் ஊழியர்களை லெப்ட் ரைட் வாங்கிய தவெக MLA… விருதுநகரில் நடந்த ஷாக்கிங் சம்பவம்…!

சிவகாங்கையிலிருந்து மதுரைக்கு இயக்கப்படும் தனியார் பேருந்து விருதுநகர் வழியாகச் சென்றபோது, பேருந்தில் ஏற முயன்ற பெண்களிடம் ஓட்டுநரும் நடத்துநரும் முறைகேடாகவும்…

45 seconds ago

“இதெல்லாம் நல்லதல்ல…” முதல்வர் விஜயை ஒருமையில் பேசிய திமுக கவுன்சிலர்…! கொதித்தெழுந்த திருமாவளவன்… அரசியல் களத்தில் பரபரப்பு…!!

தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள தவெக - திமுக மோதல் விவகாரத்தில், முதலமைச்சர் விஜய் குறித்து திமுக பெண்…

9 minutes ago

உஷார் பெண்களே… டிரோன் ஓட்ட ரூ 5 லட்சம் மானியம்… வெற்றி வான்மகள் திட்டத்தில்… யாருக்கு கிடைக்கும் தெரியுமா?… அரசாங்கம் தரும் அதிரடி வாய்ப்பு…!

தமிழ்நாட்டில் கிராமப்புற பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு ‘வெற்றி வான்மகள்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம்…

21 minutes ago

திக் திக் சம்பவம்… தனியாக இருந்த மூதாட்டி… போலீசுக்கு ஷாக் கொடுத்த அரசு ஊழியரின் ட்விஸ்ட்… ஆன்லைன் ரம்மிக்காக நடந்த அதிர்ச்சி கொலை…!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே பாபநாசம் உத்தானி மெயின் ரோட்டைச் சேர்ந்த கலைச்செல்வி (60) என்ற மூதாட்டி, கடந்த சனிக்கிழமை…

32 minutes ago

திக் திக் திக்… சொத்துத் தகராறில் அரங்கேறிய கொடூரம்… நள்ளிரவில் ரூமை மூடியபோது… நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்ட சகோதரர்கள்… குலை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!!

அஃப்சல்கரில் நிலத்தகராறு காரணமாக இரண்டு சகோதரர்கள் மீது நடத்தப்பட்ட ஆயுதத் தாக்குதல் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை…

49 minutes ago