பஞ்சாப் மாநிலம் சங்கரூர் பகுதியில் சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த 8 தொழிலாளர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் அவர்கள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பயங்கர விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து நடந்தவுடன் கடுமையான காயங்களுடன் உயிருக்குப் போராடிய தொழிலாளர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நீண்ட நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராததால், உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் அந்தத் தொழிலாளர்கள் துடிதுடித்து உயிரிழந்ததாக நேரில் பார்த்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சம்பவ இடத்திற்குத் தாமதமாக வந்த அவசர ஊர்தியாலும், மருத்துவ உதவிகள் கிடைக்க தாமதமானதாலும் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களின் குடும்பத்தினர் காவல்துறை மற்றும் அரசு நிர்வாகத்திற்கு எதிராகக் கடும் ஆவேசத்தை வெளிப்படுத்தினர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்து ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் விஜயபுராவில், காலை நடைப்பயிற்சி சென்ற கணவரைக் கள்ளக்காதலனுடன் சேர்ந்து எஸ்யூவி காரால் மோதிக் கொன்று, அதைச் சாலை…
எட்டாவில் 9 நாட்கள் விரதம் இருந்த 12 வயது சிறுமி, சாமுண்டா தேவி கோயில் திருவிழாவில் சௌமேய் சாப்பிட்டபோது அது…
தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாகக் காலியாக உள்ள மாநிலத் தலைமை தகவல் ஆணையர் மற்றும் ஆணையர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக…
தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 9 மாவட்டங்களைத் தவிர மற்ற இடங்களில் ஏற்கனவே பதவிக்காலம் முடிந்த நிலையில், தற்போது மீதமுள்ள…
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சிப் பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறி இரண்டு குழந்தைகளின் தாயான பெண்ணை…
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது அனாதைச் சிறுமியை, அவரது பெற்றோர் மறைவுக்குப் பின் வளர்த்து வந்த சொந்த அத்தையும்…