நாளை பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை… மாநில பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு..!!

By Soundarya on ஆனி 15, 2025

Spread the love

புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுவாக முக்கிய நிகழ்வுகள் அல்லது அரசியல் தலைவர்களின் வருகையின் காரணமாக போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் குடியரசு துணை தலைவர் நாளை புதுச்சேரிக்கு வர உள்ளார்.

இதனால் அவருடைய வருகையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக மதியம் 2 மணிக்குள் மாணவர்களை வீட்டிற்கு அனுப்ப உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. உரையாட இருக்கிறார் . ஜிப்மர் கல்லூரி மாணவர்களுடன் துணை குடியரசு தலைவர் உரையாட இருக்கிறார். இதன் காரணமாகத்தான் நாளை அரை நாள் விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.