தமிழக அரசியலில் மிகப்பெரிய பூகம்பம்! ராமதாஸ் குடும்பத்தை கொக்கி போட்டு தூக்கிய ரங்கசாமி….. ஆகஸ்ட் 9-ல் நடக்கப்போகும் அந்த சம்பவம்…!

Spread the love

தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் குடும்பத்தினர் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மூத்த சகோதரி காந்திமதி பரசுராமன் மற்றும் அவரது மகன் முகுந்தன் பரசுராமன் ஆகியோர் புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு குறித்துப் பேசிய முகுந்தன், பாமக தலைமைக்கும் தங்களுக்கும் இனி எந்தத் தொடர்பும் இல்லை என்றும், “நாங்கள் அந்த குடும்பமே இல்லை” எனக் கூறிவிட்டதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளார். இச்சந்திப்பின் மூலம் தமிழகத்தில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தனது கிளையைப் பரப்பத் தொடங்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாமக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்த சேலம் முன்னாள் எம்.எல்.ஏ. அருள் மற்றும் அவரது ஆதரவாளர்களும் புதுச்சேரி முதல்வரைச் சந்தித்து ஆலோசித்துள்ளனர். என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்துத் தனது ஆதரவாளர்கள் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும், சென்னையில் நடக்கும் விழாவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ முடிவு தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்றும் அருள் தெரிவித்துள்ளார். அதேவேளையில், அருளின் நேர்முக உதவியாளர் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில், அருள் ஏற்கனவே என்.ஆர்.காங்கிரஸில் இணைந்துவிட்டதாகப் பதிவிட்டுள்ளது பாமக வட்டாரத்திலும் தமிழக அரசியல் களத்திலும் மேலும் சூட்டைக் கிளப்பியுள்ளது.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு வட மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நாகை, மயிலாடுதுறை மற்றும் சேலம் ஆகியவற்றில் கணிசமான செல்வாக்கு உள்ளது. தமிழகத்தின் குறிப்பிட்ட சில தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிட வேண்டும் என்பது ரங்கசாமியின் நீண்டகால விருப்பமாகும். தற்போது புதுச்சேரியில் ஆளும் கூட்டணியில் உள்ள பாஜகவுடன் இணக்கமான சூழல் இல்லாத நிலையில், பாமகவில் உள்ள அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸை விரிவாக்கும் பணிகளை அவர் வேகப்படுத்தியுள்ளார். மேலும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோருடன் ரங்கசாமி நெருங்கிய நட்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பெருந்தலைவர் காமராஜர் மற்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்ட விழா நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில், தமிழக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. அருள் முறைப்படி அறிவிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனுடன் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பாமகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் அன்றைய தினம் ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர்.காங்கிரஸில் இணைய உள்ளதால், தமிழக அரசியல் களம் தற்போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“காதலனின் அறைக்கு சென்ற இளம்பெண்…” காதலியை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு ஓடும் லாரி முன் பாய்ந்த காதலன்… நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதலியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு, ஓடும் லாரியின் முன் பாய்ந்து 21 வயது…

2 minutes ago

டெல்லி போடும் மாஸ்டர் பிளான்…! முதலமைச்சர் விஜய்யை உலுக்கிய உளவுத்துறை ரிப்போர்ட்… அரசியலில் திடீர் பரபரப்பு…!!

தவெக தலைவர் விஜய் அரசியலில் நுழைந்து முதலமைச்சர் நாற்காலியிலும் அமர்ந்துவிட்ட நிலையில், அவரைப் பார்த்து நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திக்கேயன்…

15 minutes ago

பணம் யார் தருவது…? மாணிக்கம் தாக்கூரிடம் எகிறிய நிர்வாகிகள்… கைவிரித்த பெரிய தலைகள்… திணறும் டெல்லி தலைமை…!!

எஸ்.ஐ.ஆர் முறைகேடுகளுக்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வரும் நவம்பர் 1-ஆம் தேதி டெல்லியில் நடத்த திட்டமிட்டுள்ள…

25 minutes ago

உளவுத்துறையின் சீக்ரெட் வார்னிங்….! திடீரென ரத்தான முதல்வர் விஜய்யின் பசும்பொன் பயணம்… அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் நடைபெறவுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64-ஆவது குருபூஜை…

42 minutes ago

“எனக்கும் கார், பைக் வாங்கி தா…” நடுரோட்டில் மனைவியை அடித்து மிதித்த கணவர்… தலைமுடியை பிடித்து கொடூரத் தாக்குதல்… இணையத்தை அதிர வைக்கும் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில், தன் மனைவி தார் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் வாங்கித் தர மறுத்ததால், கணவனே மனைவியை…

1 மணத்தியாலம் ago