“முந்திரி தோப்பில் கொன்று புதைக்கப்பட்ட பெண்”… உல்லாசமாக இருந்த காதலன் செய்த கொடூரம்… நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!

By Nanthini on சித்திரை 19, 2026

Spread the love

புதுச்சேரி வில்லியனூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, முந்திரி தோப்பில் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊசுடு தொகுதி வாழப்பட்டாம்பாளையத்தைச் சேர்ந்த 53 வயதுடைய அமுதா என்ற பெண், தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தனது மகன்களைச் சந்தித்துவிட்டு வேலைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற அவர், அதன்பின் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் அணைக்கப்பட்டிருந்ததால், அவரது மகன் வடிவேலு வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அமுதாவின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது தர்மபுரியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி பரந்தாமன் என்பவர் சிக்கினார். சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டிட வேலை செய்தபோது அமுதாவிற்கும், பரந்தாமனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் அமுதாவிற்கு பரந்தாமன் சுமார் 3.5 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். ஆனால், அமுதா ஹோட்டல் வேலைக்குச் சென்ற பிறகு பரந்தாமனுடனான தொடர்பைத் துண்டித்ததோடு, பணத்தைத் திருப்பித் தர மறுத்து மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

   

body and vijay

   

இதனால் ஆத்திரமடைந்த பரந்தாமன், கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி அமுதாவை நயமாகப் பேசி இருசக்கர வாகனத்தில் விழுப்புரம் மாவட்டம் பூத்துரை கிராமத்தில் உள்ள ஒரு முந்திரி தோப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பண விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திட்டமிட்டபடி தான் மறைத்து வைத்திருந்த கயிற்றால் அமுதாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் தனது நண்பர் விஜய்யின் உதவியுடன், அமுதாவின் உடலை அங்கேயே குழிதோண்டிப் புதைத்துவிட்டுத் தப்பியோடியது விசாரணையில் அம்பலமானது.

 

பரந்தாமன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அமுதாவின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தக் கொடூரக் கொலையில் தொடர்புடைய பரந்தாமன் மற்றும் அவரது நண்பர் விஜய் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். பணத் தகராறு மற்றும் கள்ளக்காதல் காரணமாக அரங்கேறிய இந்தப் படுகொலை புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.