ரேஷன் அட்டைதாரர்களே உடனே கிளம்புங்க… இன்று(அக்..1) எல்லாமே இலவசம்…. அரசு முக்கிய அறிவிப்பு…..!

Spread the love

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உள்ள குடும்ப அட்டை எனப்படும் ரேஷன் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் மிக முக்கியமான ஆவணமாகும். ரேஷன் அட்டை என்ற இந்த குடும்ப அட்டையை பயன்படுத்தி ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படுகின்றன. அதே சமயம் அரசு வழங்கக்கூடிய பல நிதி உதவிகளும் ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு தான் கிடைக்கிறது. எனவே ரேஷன் அட்டை என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக கருதப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி அக்டோபர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் அக்டோபர் 11 அதாவது இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு உள்ளிட்ட பொது விநியோக திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். இதனை இலவசமாக மக்கள் பெறலாம். அதே சமயம் ரேஷன் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டவருக்கு அங்கீகாரம் சான்று வழங்கப்படும். ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளும் இந்த முகாமில் மேற்கொள்ளப்பட உள்ளதால் இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. சென்னையைப் போலவே தமிழகத்தில் மற்ற மாவட்டங்களிலும் இன்று மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளதால் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் இதனை பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Nanthini

Recent Posts

விஜய் ரூ.5 கோடியை கடனாக கொடுக்கவில்லை… கடைசி நேரத்தில் உண்மையை உடைத்த தந்தை SAC..!!

தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தந்தை…

8 seconds ago

என்ன கில்..! இப்படி இருக்க…? பகை மறந்து பாசம் காட்டிய கேப்டன்கள்.. ஷுப்மன் கில்லின் தாடியை மேடையில் வைத்தே கலாய்த்த ஹர்திக் பாண்டியா வைரல் வீடியோ..!

நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் மும்பை இந்தியன்ஸ் ( கில் இடையிலானMI) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல்…

2 minutes ago

ஒரு கிராம் விஷம் இத்தனை ஆயிரமா…? அரிய வகை பாம்புகளை வளர்த்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கின்… வியக்க வைக்கும் சம்பவம்…!!

சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…

45 minutes ago

“எதுல பாதுகாப்பு அதிகம்…?” டஸ்டர் Vs செல்டோஸ்…. கிராஷ் டெஸ்ட் ரிசல்ட் வெளியீடு…!!

புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…

60 minutes ago

“ஆமா, அது உண்மை தான்”…. விஜய் கொடுத்த ரூ.4 கோடி… உண்மையை உடைத்த தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…!

தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…

1 மணத்தியாலம் ago

“நீங்க கிளம்புங்க.. போதும்…” அமெரிக்காவுக்கு ‘நோ’ சொல்லும் அரபு நாடுகள்…! வளைகுடாவில் புதுப் பதற்றம்…!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…

1 மணத்தியாலம் ago