“30 வருஷம் கூடவே இருந்தேன், அவன் ஒரு பிராடு”…. “விஜய்யை நம்பாதீங்க, ஓடிப்போய்விடுவார்”.. . பி.டி. செல்வகுமார் சொன்ன அந்த ரகசியம்…. அதிர்ச்சியில் தொண்டர்கள்..!

By Nanthini on மாசி 12, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் நடிகர் விஜய் மீது, அவருடைய முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். விஜயிடம் சுமார் 30 ஆண்டுகள் மேலாளராகப் பணியாற்றிய பி.டி. செல்வகுமார், சமீபத்தில் திமுகவில் இணைந்த நிலையில், விஜயை நம்பி அரசியலில் களம் இறங்குபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

விஜய்யின் அரசியல் வருகை குறித்தும், அவர் திராவிட மற்றும் ஆளும் கட்சிகளை விமர்சிப்பது குறித்தும் பேசிய செல்வகுமார், விஜய் யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார் என்று குற்றம் சாட்டினார். குறிப்பாக, ஒரு படம் தோல்வியடைந்தால் அதன் தயாரிப்பாளரைக்கூடச் சந்திக்க விஜய் விரும்பமாட்டார் என்றும், தோல்வி அடைந்தவர்களைத் தூக்கி எறிந்துவிடுவார் என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். விஜய்க்குத் தோல்வி என்பது பிடிக்காத ஒன்று என்பதால், இக்கட்டான சூழலில் அவர் யாரையும் ஆதரிக்க மாட்டார் என்பது செல்வகுமாரின் வாதமாக உள்ளது.

   

மேலும், விஜய்க்காகப் பணம் செலவழிக்கும் நிர்வாகிகளையும் தொண்டர்களையும் எச்சரித்த அவர், தேர்தலில் தோல்வி அடைந்தால் விஜய் தனது பொறுப்புகளைத் துறந்துவிட்டு வெளிநாட்டுக்குச் சென்றுவிடுவார் என்று கூறினார். “விஜயை நம்பி உங்கள் பணத்தையும் நேரத்தையும் வீணாக்காதீர்கள்” என்று கூறியுள்ள அவர், அரசியலில் பின்னடைவு ஏற்பட்டால் விஜய் மக்களை விட்டு ஓடிவிடுவார் என்றும், யாரிடமும் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள மாட்டார் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

   

தமிழக அரசியலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்க முயற்சி செய்து வரும் வேளையில், அவருடன் நீண்ட காலம் பயணித்த ஒருவரே இவ்வாறு பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் எதிர்காலத்தை அவரது முன்னாள் மேலாளரே கேள்விக்குள்ளாக்கியிருப்பது, சமூக வலைதளங்களிலும் கட்சித் தொண்டர்களிடையேயும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.