அடச்சீ நீயெல்லாம் ஒரு தாயா?…. “பணத்துக்காகப் பெற்ற மகளையே வெளிநாட்டில் விற்ற கொடூரம்”… விபச்சாரத்தில் தள்ளி தாய் செய்த அவலம்..!

By Nanthini on ஆடி 17, 2026

Spread the love

பெற்ற மகளையே பணத்திற்காக வெளிநாட்டில் விபச்சாரக் கும்பலிடம் விற்ற கர்நாடகத் தம்பதியினரின் கொடூரச் செயல், ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டம் மல்லேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் (50) – கிராந்தி (48) தம்பதியினர், வனப்பகுதியில் கிடைக்கும் அபூர்வ மூலிகைகளைச் சேகரித்து வெளிநாடுகளுக்குச் சென்று விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தனர். ‘ஹக்கி-பிக்கி’ பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இவர்களுக்கு 20 வயதில் நந்திதா என்ற மகள் உள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மூலிகை வியாபாரத்திற்காகத் தங்கள் மகளையும் அழைத்துக் கொண்டு ஆப்பிரிக்க நாடான செனகலுக்கு இத்தம்பதி சென்றுள்ளனர்.

வியாபாரத்திற்காகச் சென்ற இடத்தில், பெற்றோர் என்ற முகமூடியைக் கழற்றி எறிந்த இந்தத் தம்பதி, வெறும் 7 லட்ச ரூபாய்க்காகத் தங்கள் சொந்த மகளையே அங்குள்ள ஒரு விபச்சாரக் கும்பலிடம் விற்றுள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி ராஜசேகரும், அவரைத் தொடர்ந்து அவரது மனைவி கிராந்தியும் இந்தியா திரும்பினர். ஆனால், மகள் நந்திதா உடன் வராதது குறித்து உறவினர்கள் கேட்டபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், செனகலில் உள்ள மற்ற பழங்குடியின மக்களிடம் விசாரித்தபோதுதான், பெற்ற மகளையே அந்தப் பெற்றோர் பணத்திற்காக விற்றுவிட்டு வந்த அதிர்ச்சி உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

   

இதற்கிடையில், அந்த விபச்சாரக் கும்பலின் பிடியில் சிக்கி நரக வேதனையை அனுபவித்த நந்திதா, எப்படியோ ரகசியமாகத் தன் உறவினர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். “என்னை என் பெற்றோரே இந்த நரகத்தில் தள்ளிவிட்டனர், எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்” என்று அவர் கண்ணீருடன் அனுப்பிய வீடியோ, உறவினர்களைப் பதற வைத்தது. உடனடியாகப் பழங்குடியின சங்கத்தினர் மற்றும் உறவினர்கள் செனகலில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உதவி கோரினர். தூதரக அதிகாரிகள், செனகல் நாட்டுப் போலீசாரின் உதவியுடன் அதிரடியாகச் செயல்பட்டு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நந்திதாவை விபச்சாரக் கும்பலிடம் இருந்து பத்திரமாக மீட்டனர்.

   

தற்போது நந்திதா தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பான கட்டுப்பாட்டில் உள்ளார்; அவர் விரைவில் இந்தியா அழைத்து வரப்பட உள்ளார். இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, உள்ளூர் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பெற்றோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மகள் இந்தியா திரும்பியதும், அவரிடம் பெறப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையில் பெற்றோரை முறைப்படி கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். பண ஆசைக்காகப் பெற்ற மகளின் வாழ்க்கையையே சீரழித்த இந்தச் சம்பவம், அப்பகுதி மக்கள் மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.