“குள்ளம், குண்டுன்னு கேலி செஞ்சவங்களுக்கு செம பதிலடி…” ரூ.1 கோடி நஷ்டஈடால் குவியும் வரன்கள்…. ஹைவே நிலத்தால் அடித்த ஜாக்பாட்… வைரலாகும் போட்டோஸ்…!!

By Devi Ramu on ஆவணி 2, 2026

Spread the love

உருவத்தைக் காரணம் காட்டி “குள்ளமாக இருக்கிறார், குண்டாக இருக்கிறார்” என உறவினர்களாலும் ஊர்மக்களாலும் கேலி செய்யப்பட்டு வந்த இளைஞர் ஒருவருக்கு நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகாமல் இருந்துள்ளது. இந்நிலையில், நெடுஞ்சாலைத் திட்டத்திற்காக அவரது விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டதால், அவருக்கு நஷ்டஈடாக ரூ.1 கோடி பண இழப்பீடு கிடைத்தது. கைநிறையப் பணம் வந்த அடுத்த கணமே, அவருக்குப் பெண் கொடுக்க ஏராளமான வரன்கள் வரிசைகட்டி வரத் தொடங்கின.

வந்த வரன்களில் தனக்குப் பிடித்தப் பெண்ணை அவர் தேர்வு செய்ததுடன், அப்பெண்ணைப் பார்க்கச் சென்ற நிகழ்வு முழுவதையும் வீடியோவாகப் பதிவு செய்தார். ஊர்மக்களின் பொறாமையைக் கிளப்பும் வகையில் அந்த வீடியோக்களை ரீல்ஸாகச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். “பணம் வந்தால் தலைவிதியே மாறிவிடும்” என்பதற்கு ஏற்ப, கேலி செய்தவர்களின் வாயை அடைத்துத் தகுதியான பெண்ணைக் கரம்பிடிக்க உள்ள இந்த வாலிபரின் கதை இணையத்தில் வைரலாகி வருகிறது.