அனைத்து வீட்டிற்கும் ரூ.1,000… தமிழக அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!

By Nanthini on மார்கழி 28, 2025

Spread the love

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், சொத்துகள் பரிமாற்றத்துக்குப்பின் சொத்துவரி பெயர் மாற்றத்துக்கு, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் தனித்தனியாக கட்டணம் வசூலித்து வந்தன. இதுதொடர்பாக அரசின் கவனத்துக்கு வந்த நிலையில், தொகையை ஒரே சீராக நிர்ணயிப்பது தொடர்பாக கடந்த 16-ம் தேதி நகராட்சி நிர்வாகத் துறையால் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் சொத்துவரி பெயர் மாற்றத்திற்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குடியிருப்புகளுக்கு 500 ரூபாய், பிற பயன்பாட்டு கட்டடங்களுக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சொத்து வரி பெயர் மாற்றத்தின் போதே குடிநீர் கட்டணம் மற்றும் புதை சாக்கடை இணைப்பு ஆகியவற்றை சம்பந்தப்பட்டவரின் பெயருக்கு அதே விண்ணப்ப அடிப்படையில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.