தமிழ் சினிமாவில் 47 ஆண்டுகளுக்கு பிற ரஜினிகாந்த் கமல்ஹாசன் என்ற 2 துருவங்கள் மீண்டும் இணைகின்றன. 47 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் இருவரும் இணைந்து நடித்த படம் நினைத்தாலே இனிக்கும். அதற்கு பிறகு இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
நேற்று மதியம் இந்த படத்தின் பிரமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது. காரில் ஏறிக்கொண்ட ரஜினியும் கமலும் இயக்குனர் நெல்சனிடம் ஹீரோ யார் அதை சொல்லுங்க என்கின்றனர். அதற்கு நெல்சன் பதில் சொல்லாமலேயே கார் விருட்டென புறப்பட்டுச் செல்கிறது. ஆனால் காரை ஓட்டுவது கமல்தான். அதனால் படத்தின் நாயகனும் கமல்தான். மேலும் ரஜினியை காட்டும் போதே கண்ணாடியை கீழே இறக்கி விட்டு ஒரு வில்லன் பார்வை பார்த்து நான்தான் வில்லன் என்பதையும் அவர் ரசிகர்களுக்கு சொல்லாமல் சொல்லிவிட்டார் என்று இணையத்தில் தகவல் வைரலாகி வருகிறது.
