மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 எப்போது கிடைக்கும்?…. காலையிலேயே வெளியான சூப்பர் குட் நியூஸ்… இல்லத்தரசிகளுக்கு இன்பதிர்ச்சி…!

By Nanthini on ஆவணி 13, 2026

Spread the love

நிதி ஆதாரம் கிடைக்கும் பட்சத்தில் தவெக அளித்த அத்தனை வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் உறுதியளித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகையை மாதம் ரூ.2,500 ஆக உயர்த்துவது, அனைத்துப் பேருந்துகளிலும் மகளிருக்கு இலவசப் பயணம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், இம்முறை பட்ஜெட்டில் இதற்கான எந்தவொரு அறிவிப்பும் இடம்பெறாததால் மக்கள் மத்தியில் ஏமாற்றம் நிலவிய நிலையில், போதிய நிதித் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு வாக்குறுதிகள் ஒவ்வொன்றாகச் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் அளித்த விளக்கத்தின் மூலம் தவெக தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.