“ஆகஸ்ட்டில் மட்டும் 20 லட்சம்”… TN முழுவதும் அண்ணாமலையின் மெகா பிளான்… பின்னணியில் நெகிழ்ச்சி காரணம்..!

By Nanthini on ஆவணி 13, 2026

Spread the love

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நன்னோக்கில் ‘We the leaders’ அமைப்பு சார்பாகத் தமிழ்நாடு முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகளை நடும் பிரம்மாண்ட பசுமை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதில் முதற்கட்டமாக ஆகஸ்ட் மாதத்திற்குள் மட்டும் 20 லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தொலைநோக்குப் பார்வை மற்றும் மறைந்த நடிகர் விவேக்கின் இயற்கைச் சேவையை நெஞ்சில் ஏந்தி முன்னெடுக்கப்படும் இந்த பசுமைப் பயணம், தமிழகத்தின் வனப்பரப்பை அதிகரிப்பதோடு எதிர்வரும் தலைமுறைக்கு ஆரோக்கியமான சூழலையும் உறுதிசெய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.