அப்படிப்போடு..! வெறும் ரூ.500 க்கு சிலிண்டர் வழங்கப்படும்… இல்லத்தரசிகளுக்கு வெளியான குட் நியூஸ்…!!

By Soundarya on ஐப்பசி 24, 2025

Spread the love

பீகார் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கும் நிலையில்  மாகபந்தன் (இந்தியா கூட்டணி) முதலமைச்சர் வேட்பாளரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார். ஏற்கனவே குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பேசிய அவர் பெண் வாக்காளர்களை குறி வைத்து, தான் ஆட்சிக்கு வந்தால் வெறும் 500 ரூபாய்க்கு சிலிண்டர்களை வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் முதியோர் ஓய்வூதியத்தை மாதத்திற்கு 1500 உயர்த்துவதாகவும் கூறியுள்ளார்.