ஈரான் போரினால் ஏற்பட்ட பொருளாதாரப் பின்விளைவுகளைச் சமாளிக்க முடியாமல், அமெரிக்காவின் பிரபல பட்ஜெட் விமான நிறுவனமான ‘ஸ்பிரிட் ஏர்லைன்ஸ்’ (Spirit Airlines) தற்போது மூடப்பட்டுள்ளது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கித் திவால் நிலையில் இருந்த இந்நிறுவனம், போரினால் ஏற்பட்ட கடுமையான பொருளாதாரச் சரிவு மற்றும் நிதி நெருக்கடி காரணமாகத் தனது சேவையை முழுவதுமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.
இந்நிறுவனத்தை மீட்பதற்காகத் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட அரசு உடைமையாக்கும் முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன. இதன் விளைவாக, ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தற்போது வேலையிழக்கும் அபாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் முக்கியமான விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்த ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் மூடப்படுவது சர்வதேச விமான போக்குவரத்துத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
