அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதற்காக அமைக்கப்பட்ட 10 பேர் கொண்ட குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தது. இந்த ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்ற பெரும்பாலான பெண்கள், டாஸ்மாக் மதுக்கடைகளால் குடும்பங்கள் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என உருக்கமாக வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெண்களின் தொடர் கோரிக்கைகள் தேர்தல் வாக்குறுதிகளில் டாஸ்மாக் கடைகளின் மூடல் அல்லது மதுவிலக்கு தொடர்பான விவாதங்களுக்கு வழிவகுக்கின்றன. தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு தொடர்பான வாக்குறுதியைச் சேர்ப்பது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. கடந்த 2016 தேர்தலில் பூரண மதுவிலக்கு வாக்குறுதியை கொடுத்த திமுகவுக்கு அதுவே நெகடிவ்வாக முடிந்தது. இதனால் EPS குழப்பத்தில் இருக்கிறார் என்கின்றனர்.
