அறிமுக இயக்குனரான பாலாஜி கேசவன் இயக்கத்தில் எமக்கு தொழில் ரொமான்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ளார். அவந்திகா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடந்தது. எனக்கு தொழில் ரொமான்ஸ் படத்தை திருமலை தயாரித்துள்ளார். இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய திருமலை தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இல்லாவிட்டால் நடிகர்கள் முன்னிலைக்கு வர முடியாது. அவர்களை மறந்து அவர்களை காலம் கீழே தெள்ளிய கதைகள் ஏராளம் இருக்கிறது.
நடிகர்கள் படத்தின் ப்ரோமோஷன்களில் பங்கேற்பதை தயாரிப்பாளர் சங்கம் உறுதிப்படுத்த வேண்டும். படத்தின் கதையை அசோக் செல்வனிடம் கூறிய பிறகு அவரது டேட்டிற்காக 7 மாதங்கள் தொடர்ந்து காத்திருந்தோம். கதை சொல்லி முடித்த பின்பு அசோக் செல்வன் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் அவரது டேட்டிற்காக தொடர்ந்து தன்னை காக்க வைத்தார். திருமணமான பிறகு அசோக் செல்வன் அவரது அம்மா அப்பாவிற்கு காஸ்ட்லியான காரை வாங்கி கொடுத்தார். அதெல்லாம் யாருது பணம் என திருமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துட்டு போறது பெட்ரோல் சாப்பாடு அது இதுன்னு எல்லா பணமும் தயாரிப்பாளர் கொடுத்தது. இப்போது அசோக்செல்வன் 2 கோடி ரூபாய் வரை தனது படங்களுக்கு சம்பளம் வாங்குகிறார். ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே 31 லட்சம் ரூபாய் பணத்தை அவரிடம் கொடுத்தேன். அதற்கு வட்டி போட்டு பார்த்தால் ஒரு கோடி ரூபாய் வரை வரும். ஒரு படத்தின் ப்ரோமோஷன்களில் அசோக் செல்வன் பங்கேற்காதது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் விஜய் தனுஷ் ஆகியோர் அவர்களது படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.
அசோக் செல்வனும் ஒரு படத்தை தயாரித்துள்ளார். அதில் உள்ள கஷ்டங்கள் அவருக்கு தெரியும் ஆனாலும் தயாரிப்பாளர்களை அவர் அலை கழிப்பதாக திருமலை குற்றம் சாட்டி இருக்கிறார். ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் அசோக் செல்வன் இருப்பதையும் திருமலை சுட்டிக்காட்டி உள்ளார். ஆர்.கே செல்வமணி உள்ளிட்ட ஜாம்பவான்கள் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக தங்களது நேரத்தை செலவழித்துள்ளனர். ஆனால் படத்தின் ஹீரோவான அசோக் செல்வன் வராமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்பி ஆதங்கமாக பேசி உள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.