தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அவருக்கென வெறித்தனமான லட்சக் கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் படம் ரிலீஸ் ஆகும் நாட்களில் தியேட்டர்கள் திருவிழா கோலம் கொள்கின்றன.
இப்படி வெறித்தனமான ரசிகர்கள் இருந்தும் அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பாக தன்னுடைய ஆயிரக் கணக்கான ரசிகர் மன்றங்களைக் கலைத்தார். இதற்கு அவர் சொன்ன காரணம் ரசிகர்கள் தங்கள் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். தேவையில்லாமல் என் பெயரில் அவர்கள் நேரத்தை வீணடிக்கவேண்டியதில்லை. குடும்பத்தைக் கவனித்துக் கொண்ட பிறகு நேரம் கிடைத்தால் படத்தைப் பார்த்து ரசிக்கட்டும் என்றார்.
அதே போல பொது வெளியிலும் தன்னை அதிகம் தலைகாட்டிக் கொள்ளாமல் ரொம்பவும் தனிமை விரும்பியாக ஒதுங்கி நிற்கிறார். ஆனால் ஆரம்பகால கட்டத்தில் அவர் இவ்வாறு இல்லாமல் அனைவருடனும் ஜாலியாக பழகும் தன்மையோடு இருந்துள்ளார்.
நடிகர் அஜித் தன்னுடைய கேரியரின் ஆரம்ப காலகட்டம் முதல் இப்போது வரை பிற நடிகர்களோடு பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். விஜய், விக்ரம் மற்றும் ஷாருக் கான் ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார். அதே போல அவர் நடித்த மல்டி ஸ்டார் படம்தான் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படம். அந்த படத்தை தாணு தயாரித்திருந்தார். அப்போது அவருக்கும் அஜித்துக்கும் இடையே மிக நெருக்கமான நட்பு உருவாகியுள்ளது.
அஜித்துடனான தனது நட்பு குறித்து தாணு தான் அளித்த ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “2003 ஆம் ஆண்டு என் மனைவி புற்றுநோய் சிகிச்சை எடுத்துவந்த நிலையில் சிங்கப்பூரில் உயிரிழந்தார். அவரை இந்தியாவுக்கு அழைத்து விமானத்தில் அழைத்து வந்தோம். அப்போது அந்த செய்தி கேள்விப்பட்டு அஜித்தும் அவர் மனைவி ஷாலினியும் என் வீட்டுக்கு வந்து நாங்கள் வரும் வரை நான்கரை மணிநேரம் காத்திருந்தனர். அப்படிப்பட்ட ஒரு மனிதரை எல்லாம் காண்பது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல” என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.