“அந்த 25 நிமிடம் தான் ஹைலைட்”.. வாடிவாசல் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் கலைப்புலி தாணு..!

By Nanthini on சித்திரை 7, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் தான் வாடிவாசல். இந்தத் திரைப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க உள்ள நிலையில் ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார் . இப்படத்தின் அறிவிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது. ஆனால் தற்போது தான் இந்த திரைப்படத்தின் பணிகள் தொடங்கியுள்ளது. இதற்கு முன்பாக இந்த படத்தின் ஒரு சிங்கிள் பாடலை கம்போஸ் செய்து முடித்து விட்டதாக ஜிவி பிரகாஷ் அறிவித்திருந்தார். இப்படியான நிலையில் தற்போது ஒரு முக்கிய அப்டேட்டை தயாரிப்பாளர் கலைபுலி தாணு வெளியிட்டுள்ளார்.

Vetrimaaran gives an update on the shooting of “Vadivasal” | “வாடிவாசல்”  படப்பிடிப்பு அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்

   

வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜூலை மாதம் தொடங்கும் என்றும் அதன் பிறகு படப்பிடிப்பு வேலைகள் தொடர்ச்சியாக விறுவிறுப்பாக நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த திரைப்படத்தின் ஒரு பாடல் ரெக்கார்டிங் முடிந்துவிட்டது எனவும் அந்த பாடலை கேட்டதும் ஆச்சரியப்படும்படியாக இருந்தது எனவும் அந்த பாடலை எழுதியவர் யார் என்பதை அறிந்து கொள்ள மிகவும் ஆவலுடன் காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதே சமயம் கடந்த வாரம் வெற்றி மாறனை சந்தித்தபோது இந்த திரைப்படத்தின் 25 நிமிட காட்சிகளை தன்னிடம் கூறியதாகவும் அந்த 25 நிமிட காட்சிகளே இந்த படத்தின் ஹைலைட் என்றும் கூறியுள்ளார்.

   

வாடிவாசல்' நிலை என்ன? - தயாரிப்பாளர் தாணு விளக்கம் | nakkheeran

 

அதேசமயம் அந்த காட்சிகளை பார்த்து பார்வையாளர்கள் நிச்சயம் பிரமிப்பான அனுபவத்தை பெறுவார்கள் எனவும் கூறியுள்ளார். அந்த அளவிற்கு திரைக்கதை மிகவும் அருமையாக இருந்துள்ளது என கலைப்புலி தாணு தெரிவித்துள்ள நிலையில் அவருடைய கருத்துக்களை வைத்து படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாக்கி வரும் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக அவர் வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப்படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.