Categories: சினிமா

நான் மறக்கவே மாட்டேன்… சுகன்யா செய்த அந்த காரியம்… தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்…!!

Spread the love

திரை உலகில் எத்தனையோ நடிகர் நடிகைகள் இருந்தாலும் எந்த சூழ்நிலையிலும் எளிமையாக நடப்பவர்கள் சிலரே அவர்களில் ஒருவர் தான் 90களில் திரையுலகில் கதாநாயகியாக வலம் வந்த சுகன்யா. 1991 ஆம் ஆண்டு தமிழில் வெளியான புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார் சுகன்யா.

இவர் நடித்த மூன்றாவது படமான சின்ன கவுண்டர் படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார். இப்படி தொடக்கத்திலேயே சிறந்த நடிகையாக விளங்கிய சுகன்யா எந்த அளவிற்கு எளிமையானவர் என அவர் நடித்த சின்ன மாப்பிள்ளை திரைப்படத்தை தயாரித்த டி சிவா அவர்கள் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

சின்ன மாப்பிள்ளை படப்பிடிப்பிற்காக கோபிசெட்டிபாளையத்தில் தங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஆனால் அப்போது சுகன்யாவிற்கு தங்குவதற்கு ஹோட்டலில் அறை இல்லாமல் இருந்துள்ளது. அவர் தனது தாய் மற்றும் தந்தையாருடன் படப்பிடிப்பிற்கு வந்துள்ளார்.

கடைசியாக ஏசி ரூம் இல்லாமல் சாதாரணமான ரூம் கூட இல்லாமல் புதிதாக கட்டப்பட்ட கட்டி முடிக்கப்படாத அறை ஒன்றுதான் கிடைத்துள்ளது. அந்த அறையில் ஜன்னல் கதவுகளும் வைக்கப்படவில்லை இதனால் டி சிவா அவர்கள் சுகன்யாவிடம் சென்று இந்த ஒரு அறை தான் இருக்கிறது கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியுமா என கேட்டுள்ளார்.

உடனே சுகன்யாவும் தாங்கள் அட்ஜஸ்ட் செய்து கொள்வதாக கூறி அந்த அறையிலேயே வேஷ்டி மற்றும் சேலைகளை வைத்து ஜன்னல்களை மறைத்து தங்கி உள்ளார். அந்த அளவிற்கு எளிமையாக சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்படுபவர் நடிகை சுகன்யா என கூறியுள்ளார்

indhuramesh

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

1 மணத்தியாலம் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

1 மணத்தியாலம் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

2 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

2 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

3 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

3 மணத்தியாலங்கள் ago