#image_title
நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும் பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல், சினேகா, லைலா, மைக் மோகன் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 80,90’s காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் மைக் மோகன். நடிப்பின் மூலம் மைக் மோகனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அவரது படங்கள் வெள்ளிவிழா கண்டது.
சிறந்த நடிகருக்கான பல விருதுகளையும் தன்வசப்படுத்தியவர் மைக் மோகன். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹரா திரைப்படத்தின் மூலம் மைக் மோகன் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த நிலையில் சமீபத்தில் மைக் மோகன் அளித்த பேட்டியில் கூறியதாவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரிய மிகப்பெரிய நடிகர் விஜய் சார். அவருடன் இணைந்து நடிப்பதற்கு வாய்ப்பு வந்துள்ளது.
#image_title
வெங்கட் பிரபுவிற்கும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கும் நன்றி சொல்கிறேன். நடிகர் விஜயிடம் கற்றுக் கொள்ள வேண்டிய ஏராளமான விஷயங்கள் இருக்கிறது. அவர் மிகவும் அமைதியான நபர். அந்த குணத்தை அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். நான் நிறைய முறை இதை விஜயிடம் சொல்லி இருக்கிறேன். அவரிடம் இருக்கும் சிறப்பு அம்சங்களில் அதுவும் ஒன்று. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அமைதியாக உட்கார்ந்து பொறுமையாக கவனிப்பார். அதை நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என கூறியுள்ளார்.
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…