Connect with us

CINEMA

“கணவர் பணக்காரரா இருப்பாருன்னு நெனச்சேன்”…. இப்படி மோசடிக்காரரா இருப்பாருன்னு எதிர்பார்த்திருக்க மாட்டாங்க மகாலட்சுமி….!!

லிப்ரா ப்ரோடுக்ஷன் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளர் ரவீந்திரன் நட்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்துள்ளார். தயாரிப்பாளர் ரவீந்திரன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து இணையத்தில் பிரபலமானார்.

   

கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி நடிகை மகாலட்சுமியை ரவீந்திரன் திருமணம் செய்து கொண்டார். இருவரும் தங்களது முதல் திருமண நாளை கொண்டாடி உள்ளனர். தற்போது மோசடி புகாரின் பேரில் போலீசார் தயாரிப்பாளர் ரவீந்திரனை கைது செய்தனர். கடந்த 2021-ஆம் ஆண்டு கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க பங்குதாரராக சேர்த்து கொள்வதாக சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரிடம் தயாரிப்பாளர் ரவீந்திரன் கூறியுள்ளார்.

மேலும் ரவீந்திரன் 16 கோடி ரூபாயை வாங்கி மோசடி செய்ததாக பாலாஜி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் தொழிலதிபர் பாலாஜியிடமிருந்து தயாரிப்பாளர் ரவீந்திரன் பணத்தை வாங்கி திரும்பி கொடுக்காதது தெரியவந்தது.

இந்நிலையில் தனது மனைவியை பார்த்துவிட்டு தயாரிப்பாளர் ரவீந்திரன் அசோக் நகர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதனை அறிந்த தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று தயாரிப்பாளர் ரவீந்திரனை கைது செய்தனர். மேலும் அவரது பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top