அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் திரைப்படத்தில் தயாரிப்பாளர் ரவீந்தர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்றார். இந்த திரைப்படம் ஜெயம் ரவிக்கு மிகச்சிறந்த வரவேற்பு கொடுத்தது. அதைத்தொடர்ந்து லவ் டுடே என்ற திரைப்படத்தை தானே இயக்கி ஹீரோவாகவும் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சூப்பர் டிப்பர் ஹிட் அடித்தது. இந்த படம் மூலமாக தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துவிட்டார் பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். அதை தொடர்ந்து அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய திரைப்படத்தின் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு டிராகன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் 13-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் அடுத்த ஷெடுலுக்காக காத்திருக்கின்றார். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் தயாரிப்பாளர் ரவீந்தர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வழியாக இருக்கின்றது. தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை தயாரித்தவர். தனது தயாரிப்பு மூலமாக இல்லாவிட்டாலும் பல சர்ச்சையான விஷயங்களால் பிரபலமானார்.
பிக்பாஸில் ஒரு நடிகை பற்றி பேச்சு, பின் சீரியல் நடிகை மகாலட்சுமி திருமணம் என பல விஷயங்களால் பிரபலமான இவர் பல மாதங்களுக்கு முன்பு 16 கோடி ஏமாற்றியதாக போலீசில் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து ஜெயிலில் நிறைய கஷ்டப்பட்டதாகவும் ஒரு பேட்டியில் அவரை தெரிவித்திருந்தார்.

ஜெயிலில் இருந்து வெளிவந்த பிறகு பெரிய அளவில் ஆக்டிவாக இல்லாமல் இருக்கும் ரவீந்தர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எதுவும் பெரிதாக பதிவிடுவதில்லை. இந்நிலையில் தயாரிப்பாளரிலிருந்து நடிகராக மாறி இருப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். அதாவது அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அவரே பகிர்ந்து இருக்கின்றார்.
View this post on Instagram
