Connect with us

டீக்கடைக்கு வந்த காமெடி நடிகர்.. சிவாஜி பாடலை பாடி கலாய்த்த ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ..!

CINEMA

டீக்கடைக்கு வந்த காமெடி நடிகர்.. சிவாஜி பாடலை பாடி கலாய்த்த ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ..!

டீக்கடைக்கு டீ சாப்பிட வந்த நகைச்சுவை நடிகர் tsr ஸ்ரீனிவாசனை கடையில் இருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து கிண்டல் செய்து சிரிக்க வைத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் நடிகர் டிஎஸ்ஆர் ஸ்ரீனிவாசன் 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். எங்க வீட்டுப் பிள்ளை, கட்டா குஸ்தி, சைரன், சேதுபதி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த பிரபலம் ஆகி இருக்கின்றார், அதிலும் அயலி வெப் சீரியஸில் இவர் நடிப்பை பார்த்து பலரும் இவரை திட்ட வந்தனர்.

   

அப்படி தனது சிறப்பான நடிப்பால் ஒரு அங்கீகாரம் பெற்றிருக்கின்றார். காமெடி நடிகராகவே சினிமாவில் பார்த்து வந்த இவரை அயலி வெப் சீரியஸில் வில்லனாக பார்க்க முடிந்தது இந்நிலையில் இவர் நெல்லைக்கு சூட்டிங் சென்று இருக்கின்றார். அங்கு திசையன்விளையில் என்கின்ற கிராமத்தில் ஒரு டீ கடைக்கு பால் சாப்பிடுவதற்காக வந்திருக்கின்றார்.

 

அங்கு இருந்த ரசிகர்கள் அனைவரும் அவரை பார்த்து உற்சாகமாகி பாடல் பாடி கிண்டல் செய்திருந்தனர். அதிலும் ஒரு ரசிகர் நடிகர் சிவாஜி நடிப்பில் வெளியான ராஜநடை திரைப்படத்தில் வெளியான பாலூட்டி வளர்த்த கிளி என்ற பாடலை பாடு கிண்டல் செய்து வந்தார். அதற்கும் மனம் கோணாமல் டி எஸ் ஆர் ஸ்ரீனிவாசன் சிரித்துக் கொண்டே கலகலப்பாக அந்த இடத்தையே மாற்றினார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அவரின் பெருந்தன்மையை பலரும் பாராட்டி வருகிறார்கள். சினிமாவில் நடிப்பதற்கு அழகு முக்கியம் தான் அதைவிட திறமை மிகவும்  முக்கியம். அதனை நிரூபித்துக் காட்டியவர் டிஎஸ்ஆர் ஸ்ரீனிவாசன். இவர் தற்போது சினிமாவில் ஒரு சீனில் வந்தாலும், அதில் ஸ்கோர் செய்து தற்போது சிறந்த நடிகராக இருந்து வருகின்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by News7 Tamil (@news7tamil)

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top