நடிகையா இல்ல தீவிரவாதியா..? பவுன்சர்களுக்கு தயாரிப்பாளர் ஏன் சம்பளம் கொடுக்கணும்..? ஹன்சிகாவை விமர்சித்த தயாரிப்பாளர் ராஜன்..!!

By Priya Ram on ஆகஸ்ட் 2, 2024

Spread the love

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ் திரைப்படம் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னணி நடிகர்களின் படங்களை தியேட்டர்களில் ரிலீஸ் செய்து 8 வாரங்கள் ஆன பிறகுதான் ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும்.

   

ஏற்கனவே அட்வான்ஸ் பெற்ற தயாரிப்பு நிறுவனத்தின் திரைப்படங்களில் பணி புரியாமல் புதிதாக வரும் தயாரிப்பு திரைப்பட நிறுவனங்களுக்கு சென்று விடுவதால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இதனால் நடிகரோ நடிகையோ அட்வான்ஸ் வாங்கினால் அந்த படத்தை முடித்து கொடுத்துவிட்டு தான் அடுத்த படங்களுக்கு செல்ல வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நடிகர்கள் தனுஷ் தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பணத்தை வாங்கிவிட்டு அந்த படத்தில் நடித்து கொடுக்காமல் புதிய திரைப்படங்களில் நடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

   

 

 

இந்த நிலையில் தயாரிப்பாளர் ராஜன் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, தயாரிப்பாளர் சங்கத்தில் இப்படி உடனடியாக தீர்மானத்தை நிறைவேற்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் ஒரு ஒரு மாசம் உட்கார்ந்து பேசலாம். எதுவாக இருந்தாலும் பேசி தான் தீர்க்கணும். வேலை நிறுத்தம் என்பது கடைசி கட்டமாக தான் இருக்கணும். அதுக்கு முன்னாடி பேச்சுவார்த்தை தான் முக்கியம். பேச்சுவார்த்தை நடத்தியும் பிடிவாதமாக இருந்தாங்க அப்படின்னா வேலை நிறுத்தத்தை அறிவிக்கலாம். யாருக்கும் பாதகமாக இருக்கக் கூடாது.  மேலும் பிரபல நடிகையான ஹன்சிகா மோத்வானி பற்றியும் ராஜன் பேட்டியில் கூறியுள்ளார்.

மும்பையில் உள்ள வீட்டிலிருந்து ஏர்போர்டிற்கு வருவதற்கு, ஏர்போர்ட்டில் இருந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போவதற்கு, ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு என ஹன்சிகாவை சுற்றி எப்போதும் பவுன்சர்கள் இருக்க வேண்டுமாம். எதுக்கு இத்தனை பவுன்சர்கள்? நடிகைகள் என்ன பெரிய தீவிரவாதியா? அந்த பவுன்சர்களும் தயாரிப்பாளர்கள் தான் சம்பளம் கொடுக்க வேண்டுமாம். இதெல்லாம் நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தான் தட்டி கேட்கணும். தங்கள் அழைத்து வரும் பவுன்சர்கள் உதவியாளர்களுக்கு நடிகர் நடிகைகள் தான் சம்பளம் கொடுக்க வேண்டும். அவர்களுக்கும் சேர்த்து தயாரிப்பாளர்களிடம் சம்பளத்தை வாங்கினால் தயாரிப்பாளர்களின் நிலைமை என்ன ஆவது என கேள்வி எழுப்பியுள்ளார்.