நடிகர் யோகி பாபு லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் என்ட்ரி செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களையும் கவர்ந்தார். இதனை ஒட்டி இவருக்கு 2009 ஆம் ஆண்டு “யோகி” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் .இவர் 20 ஆண்டுகளைக் கடந்து 350 க்கு மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.காமெடியாகவும் ஹீரோவாகவும் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்பட்டாலத்தை பெற்றுள்ளார்.
இதனை ஒட்டி மண்டேலா, பொம்மை நாயகி போன்ற அழுத்தமான கதைகளில் நடித்து நடிகர் என்று பெயர் பெற்றுள்ளார். ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற கோலிவுட் முன்னனி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக சிம்பு தேவன் இயக்கத்தில் சிம்மி ஜெயந்த், கௌரி கிஷான் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களின் நடித்துள்ள “போர்ட்” படத்திலும் நடித்துள்ளார். இப்படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்த போர்ட் படம் சுதந்திரப் போராட்ட காலத்தை மையமாகக் கொண்டு பீரியட் படமாகவும் உருவாகிறது. படத்தின் அதிகபட்ச காட்சிகளை கடலில் எடுக்கப்பட்டுள்ளனர். படத்தின் டிரைலர், பாடல் உள்ளிடவை வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படத்திற்கு ஆவலை தூண்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறப்போகிறது.
இதனை ஒட்டி போர்ட் பட பிரமோஷனுக்கு நடிகர் யோகி பாபு சின்னி ஜெயந்த் மற்றும் கௌரி கிஷானுடன் இணைந்து கல்லூரி மாணவர்களுடன் உரையாடியபோது இவர் விஜய் உடன் ஆடிய கிரிக்கெட்டை குறித்து பேசி உள்ளார். வாரிசு பட சூட்டிங் இடையில் விஜய் உள்ளிட்டவர்களை அழைத்துச் சென்று தான் கிரிக்கெட் விளையாடியதாகவும், விஜய்யிடம் சீட்டிங் செய்ய முயன்றதாகவும் யோகி பாபு கூறியுள்ளார். விஜய் டீம் அடித்த 6 ஐ 4 ஆக மாற்றியதாகவும், ஆனால் விஜய் இதைக் குறித்து கோபமடைந்து சண்டையிட்டு சிக்ஸராக மாற்றியதாகவும் யோகி பாபு கூறியுள்ளார்.
அதனை ஒட்டி மூன்று மேட்ச் விளையாடியதாகவும், விஜய் கீழே விழுந்து பில்டிங் செய்ததாகவும் யோகி பாபு கூறினார். தனக்கு கிரிக்கெட் மற்றும் புட்பால் இரண்டுமே மிகவும் பிடித்தமான விளையாட்டுகளில் ஒன்றாகும். இதை இரண்டுமே நாங்கள் ஓய்வு நேரத்தில் தான் விளையாடி வருவோம் என்று யோகிபாபு மேலும் கூறியுள்ளார்.