தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் மற்றும் இசை என பன்முக திறமை கொண்டவர் தான் கலைப்புலி எஸ் தானு. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் படங்களை வைத்து புது இலக்கணம் படைத்தவர். இதுவரை யாரும் எதிர்பாராத வகையில் இவருடைய படங்களுக்கான விளம்பரங்களை உருவாக்கி இந்திய அளவில் பெயர் பெற்றவர். தமிழ் சினிமாவில் இவருக்கு தெரியாத துறையே கிடையாது. தற்போது சச்சின் படத்தின் ரீ ரிலீஸ் ரசிகர்கள் கொண்டாடுவதற்கு இவர் முக்கிய காரணமாக இருக்கிறார்.
விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான சச்சின் திரைப்படம் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த படத்தைக் கொண்டாடும் விதமாக கடந்த வாரம் இந்த திரைப்படம் தமிழக முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் இந்த படத்தை தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு ரீ ரிலீஸ் செய்தார். இதனைத் தொடர்ந்து இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், எனக்கு கதையை ஸ்கிரிப்ட் கொடுத்தா படிக்க மாட்டேன். கதை சொல்ல சொல்லுவேன். அவர்கள் கதை சொல்லும் 1.30 மணி நேரத்தில் இந்த படம் ஹிட் ஆகும் என்பதை என்னால் கணிக்க தெரிந்தால் தான் தயாரிப்பாளராக நீடிக்க முடிகிறது.
உதாரணத்திற்கு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நான்கரை மணி நேரம் காக்க காக்க படத்தின் கதையை சொன்னாரு. அவர் வந்து என்கிட்ட காக்க காக்க படத்தின் கதையை சொல்லும்போது 3.30 மணி நேரம் ஆச்சு. நான் சொன்னேன் இந்த படம் 4.30 மணி நேரம் வரை நீடிக்கும் என்றேன். அவர் அப்படியெல்லாம் இல்லை சார் என்று கூறினார். ஆனால் படம் எடுத்து முடித்து என்னிடம் 3.45 மணி நேரமாக கொண்டு வந்தார். அதன் பிறகு நான் மணிரத்னம் சார் அலுவலகத்தில் உட்கார்ந்து எடிட்டிங் செய்து ஆண்டனி என்ற எடிட்டர் காக்க காக்க படத்தின் மூலம் கிடைத்தார்.
ஒரு படத்தை குறைந்தபட்சம் பாமரனுக்கு புரியும் வகையில் எடுக்க வேண்டும். சென்னையில் படித்தவர்களும் இருக்கிறார்கள் படிக்காதவர்களும் இருக்கிறார்கள். எடுத்ததும் ஒரு கல்லறையை காட்டி ஹீரோயின் இறந்து போனது போல காட்டினால் எப்படி புரியும். குறிப்பாக ஒருத்தர் படம் பார்க்க 5 மணி நேரம் செலவிடுகிறான். அவனுக்கு புரியும் மொழியில் அரை மணி நேரத்தில் ஆடியன்ஸ் தூக்கி சாப்பிடும். அப்படி இருந்தால் மட்டுமே எந்த படமா இருந்தாலும் வெற்றி பெறும் என்று தானு கூறியுள்ளார்.
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…