விஷால் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ் பெற்ற நடிகர் ஆவார். இவரது தந்தை ஜிகே ரெட்டி சினிமா திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் விஷால். பின்னர் 2004 ஆம் ஆண்டு செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.
தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை போன்ற ஆக்சன் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் விஷால். 2010 காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் விஷால். பின்னர் அவன் இவன், பட்டத்து யானை, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், துப்பறிவாளன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அடுத்ததாக துப்பறிவாளன் 2 படத்தின் மூலம் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார் விஷால்.
இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் சந்தானம் நடித்த திரைப்படம் மதகஜராஜா. இந்த திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சில பல காரணங்களால் இந்த திரைப்படம் வெளியாகவே இல்லை. தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற பொங்கலுக்கு இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் இவ்வளவு லேட் ஆக இந்த படத்தை ரிலீஸ் செய்கிறார்களே என்று பேசி வருகின்றனர். ஆனால் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஜெமினி பிலிம் சர்க்யூட் அந்த 2010 காலகட்டத்தில் பல படங்களை தயாரித்து மிகவும் நஷ்டத்துக்கு உள்ளாகி கடனுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். தற்போது இந்த படத்தை ரிலீஸ் செய்வதன் மூலம் கிடைக்கும் வசூலை வைத்து கடனை அடைத்து விடலாம் என்று முடிவு செய்து தான் இத்தனை வருடங்கள் கழித்து இந்த படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்.