Director Nelson

ரஜினி கமல் இணையும் படத்தில் கமிட் ஆன பிரபல நடிகை… இதில் அவர் யாருக்கு ஜோடி? – டைரக்டர் நெல்சன் எடுத்த அதிரடி முடிவு!

By Elango on மாசி 28, 2026

Spread the love

இயக்குனர் நெல்சன் இயக்கிய முதல் படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகு அவர் டாக்டர் பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கினார். தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தை இயக்கி மாபெரும் வெற்றி பெற்றார். இது சூப்பர் ஸ்டாருக்கு கம்பேக் தருகிற ஒரு படமாக அமைந்ததால் ஜெயிலர் 2 படத்தை உருவாக்க முடிவானது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைய உள்ளது.

இதற்கிடையே ரஜினி கமல் இணைந்து நடிக்கும் ஒரு புதிய படத்தை நெல்சன் டைரக்ட் செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பிரமோ வீடியோ வெளியாகி இணையத்தில் பட்டைய கிளப்பியது. இப்போது இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் நடிகையர் தேர்விலும் நெல்சன் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். அதில் தனது டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் முக்கிய கேரக்டரில் நடிக்க நெல்சன் கமிட் செய்துள்ளார். எதற்கும் துணிந்தவன் கேப்டன் மில்லர் பிரதர் போன்ற படங்களில் பிரியங்கா மோகன் நடித்திருந்தார்.