பணத்துக்காக இப்படியா?.. எலி விழுந்த மசாலா தண்ணீரில் பானி பூரி சாப்பிட்ட நபர்… வைரலாகும் முகம் சுளிக்கும் வீடியோ..!!!

By Rajeshwari on மாசி 28, 2026

Spread the love

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அரங்கேறியுள்ள ஒரு விசித்திரமான மற்றும் அருவருப்பான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரண் தஞ்சு என்பவரும் அவரது நண்பரும் ஒரு வினோதமான பந்தயம் கட்டிக்கொண்டனர் அதன்படி, நண்பர் சாப்பிடும் ஒவ்வொரு பானி பூரிக்கும் தலா 50 ரூபாய் பரிசு தருவதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக அவர்கள் ஒரு உள்ளூர் பானி பூரி கடைக்குச் சென்றபோது, எதிர்பாராத விதமாக ஒரு உயிருள்ள எலி மசாலா வாளிக்குள் விழுந்து நீந்தத் தொடங்கியது. உடனடியாக கடைக்காரர் அந்த எலியை வெளியேற்றினாலும், அந்த இடத்தின் சுகாதாரம் கேள்விக்குறியானது.

   

 

View this post on Instagram

 

A post shared by The Decoded Reality (@thedecodedreality)

   

“>

 

இருப்பினும், பந்தய வெறியில் இருந்த அந்த இளைஞர், எலி விழுந்த அதே மசாலா நீரைக் கொண்டே தொடர்ந்து பானி பூரிகளைச் சாப்பிடத் தொடங்கினார். அருவருப்பான அந்தச் சூழலையும் பொருட்படுத்தாமல், பந்தயத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற பிடிவாதத்தில் மொத்தம் 31 பானி பூரிகளை அவர் சாப்பிட்டு முடித்தார்.

இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பணத்திற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்த அந்த இளைஞரின் செயலை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், தெருவோரக் கடைகளில் நிலவும் சுகாதாரச் சீர்கேடுகள் குறித்தும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.