பிரியா முனீஸ் ராஜா ‘ராஜ்கிரண் மகள் இல்லை.. ராஜ்கிரணின் மனைவி பெற்ற மகள்’… என்னப்பா இது ஒரே குழப்பமா இருக்கு…

By Begam

Published on:

பிரியா ராஜ்கிரணின் கணவர் முனீஸ் ராஜா கூறிய தகவல் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் ராஜ்கிரண் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திரையுலகில் அறியப்படுகிறார். இவர் சில  திரைப்படங்களை தானே தயாரித்தும் இயக்கியும் உள்ளார். ராஜ்கிரனுக்கு ஜீனத் பிரியா என்று ஒரு மகள் உள்ளார். அவருக்கும் சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது.

   

 

நடிகர் முனீஸ் ராஜா சன் டிவி சீரியலில் ஒளிபரப்பான ‘நாதஸ்வரம்’ தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர். முதலில் இவர்களது காதலை இருவீட்டாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் சமரச பேச்சு வார்த்தை மூலம் முனீஸ் ராஜாவின் வீட்டில் காதல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

 

ஆனால் இயக்குனர் ராஜ்கிரண் குடும்பத்தினர் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதைத்தொடர்ந்து இருவரும் தற்பொழுது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர். நடிகர் ராஜ்கிரண் “அவர் என் மகளே இல்லை, வளர்ப்பு மகள் தான்” என அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் தற்போது ராஜ்கிரணின் மனைவி போலீசில் புகார் ஒன்று அளித்துள்ளார்.

நடிகர் முனீஸ் ராஜா பணம் கேட்டு தொல்லை செய்வதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். இது பற்றி செய்தியாளர்களை சந்திப்பில் பேசிய முனிஷ் ராஜா  ‘பிரியா ராஜ்கிரணின் மகள் இல்லை, தற்போது அவரது மனைவியாக இருக்கும் பத்மஜாவுக்கும் இன்னொருவருக்கும் பிறந்த குழந்தை. பிரியா குழந்தையாக இருக்கும்போதே ராஜ்கிரணுடன் அவர் வாழ தொடங்கி இருக்கிறார்’ என்று கூறியுள்ளார்.

இதைப்பற்றி பிரியா குறிப்பிடும் பொழுது ‘எனது நகைகள் அந்த வீட்டில் உள்ளது. அது என் அப்பா எனக்கு கொடுத்தது அதைக் கேட்டதற்கு தற்பொழுது பொய் புகார் அளித்துள்ளார். இது பற்றி நான் செய்தியாளர்களை சந்தித்து கூறவிருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.