Connect with us

காதலனை கரம்பிடித்த சூப்பர் சிங்கர் பிரியா ஜெர்சன்.. வெளியான Wedding video..!!

CINEMA

காதலனை கரம்பிடித்த சூப்பர் சிங்கர் பிரியா ஜெர்சன்.. வெளியான Wedding video..!!

பிரபல பாடகி பிரியா ஜெர்சன் கேரளாவில் பிறந்தவர். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். பிரியா ஜெர்சன் வெளிநாடுகளில் இசை பயின்றுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

   

கடந்த 2023-ஆம் ஆண்டு சூப்பர் சிங்கர் 9 சீசன் நடந்து முடிந்தது. இந்த சீசனுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. 2023 சூப்பர் சிங்கர் 9 சீசன் டைட்டிலை அருணா டைட்டிலை வென்றார். இரண்டாவது இடத்தைப் பிடித்து பிரியா ஜெர்சன் ரன்னர் ஆனார். இவரது குரலுக்கு மயங்காதவர்கள் இருக்கவே முடியாது.

   

 

டைட்டிலை வெல்ல முடியாவிட்டாலும் பல ரசிகர்களின் மனங்களை பிரியா ஜெர்சன் வென்று விட்டார். கேரளாவை சேர்ந்த சார்லி ஜாய் என்பவரும் பிரியா ஜெர்சனும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோர் சம்பந்தத்துடன் இருவருக்கும் நிச்சயம் நடந்து முடிந்தது.

ஏற்கனவே நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலை தளத்தில் வைரலானது. இந்த நிலையில் பிரியா ஜெர்சனுக்கும் அவரது காதலர் சார்லி ஜாயிக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமண வீடியோவை பிரியா ஜெர்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Priya Jerson🌸 (@priya.jerson)

author avatar
Priya Ram
Continue Reading
You may also like...

More in CINEMA

To Top