CINEMA
வேற லெவலில் மிரட்டும் MATTA சாங்.. தளபதி ரசிகர்களுக்கு செம ட்ரீட் ரெடி..!!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சினேகா, லைலா, பிரபு, பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த படத்தில் விஜய் அப்பா மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கோட் படத்தின் கிராபிக்ஸ் டப்பிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 17-ஆம் தேதி படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. துப்பாக்கி சண்டை, கார் சேஸிங், மோட்டார் சைக்கிளில் பறப்பது என ஆக்சன் காட்சிகள் நிறைந்து காணப்படுவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
அது மட்டும் இல்லாமல் பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தை AI தொழில்நுட்பம் மூலம் கோட் திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளார்களாம். கோட் படத்தின் டிரைலரை ஐந்து கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இப்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோட் படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே ரிலீஸ் ஆகி மக்களுடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இசையமைப்பாளர் யுவனின் பிறந்த நாளை முன்னிட்டு கோட் படத்தின் நான்காவது பாடல் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் கோட் படத்தின் நான்காவது பாடலை சற்று முன் ரிலீஸ் செய்துள்ளனர். பாடல் வேற லெவலில் இருப்பதாக விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.