ஐயோ… என் பொண்ணு இனி வரமாட்டாளா?… கதறிய பெற்றோர்… அமெரிக்காவில் நொறுங்கிய தனியார் விமானம்… 23 வயது இளம் பெண் உட்பட… 9 பேர் பலியான கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

By Swetha on கார்த்திகை 5, 2026

Spread the love

கொலம்பியாவின் பொகோட்டா நகரைச் சேர்ந்த 23 வயதான அனா மரியா ரமிரெஸ் செட்டினா, அமெரிக்காவில் உள்ள குடும்பம் ஒன்றில் குழந்தைப் பராமரிப்பாளராகப் பணிபுரிந்து வந்தார். தனது கனவுகளையும் எதிர்கால திட்டங்களையும் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இந்த இளம் பெண்ணின் வாழ்க்கை, அமெரிக்காவில் நிகழ்ந்த எதிர்பாராத கோர வான் விபத்து ஒன்றினால் சோகத்தில் முடிந்துள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள பாம் பீச் கவுண்டி பகுதியில், அவர் பயணித்த லியர்ஜெட் 60 ரகத் தனியார் விமானம் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து ஒரு குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. தரையில் சரிந்து விழுந்து நொறுங்கிய இந்த விபத்தின் கோரத் தாண்டவத்தில், விமானத்திலிருந்த 9 நபர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

   

https://twitter.com/ColombiaOscura/status/2117642058013786235/video/2

   

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணைக்குப் பிறகு உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். அந்தப் பட்டியலில் 23 வயது நிரம்பிய அனா மரியா ரமிரெஸ் செட்டினாவும் ஒருவர் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அவரது குடும்பத்தினரையும் பொகோட்டா மக்களையும் பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது.