ஐயோ… நடுரோட்டில் நின்ற லாரி மீது… மோதிய தனியார் பேருந்து… தூய்மைப் பணியாளர் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 12, 2026

Spread the love

ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம், சிந்தலபுடியில் உள்ள யண்டபள்ளி அருகே அமைந்துள்ள கிரீன்ஃபீல்ட் நெடுஞ்சாலையில் அதிகாலை வேளையில் ஒரு கோரமான சாலை விபத்து நிகழ்ந்தது. ஹைதராபாத்தில் இருந்து விஜயநகரம் நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த ஒரு தனியார் சொகுசுப் பேருந்து, சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது எதிர்பாராதவிதமாக பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தின் போது பேருந்தில் மொத்தம் 17 பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். பேருந்து லாரியின் பின்புறம் பலமாக மோதிய அதிர்ச்சியில், அதில் பணிபுரிந்து வந்த தூய்மைப் பணியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததால் பேருந்தின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது.

   

மேலும், இந்த விபத்தில் பேருந்திலிருந்த பயணிகள் பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினரும் அதிகாரிகளும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போதைய தகவலின்படி, சிகிச்சைப் பெற்று வருபவர்களில் இருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.