அடச்சீ… திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் அத்துமீறல்… தீ ஷோ பிரபல நடனக் கலைஞர் அதிரடி கைது… இணையத்தில் வைரல்…!

By Swetha on புரட்டாதி 12, 2026

Spread the love

பிரபல தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியான ‘தீ’ ஷோ நடனக் கலைஞர் ராஜு, பாலியல் துன்புறுத்தல் வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியதுடன், தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறி பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் இந்த மாதம் 9-ஆம் தேதி மியாபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணைக்குப் பிறகு நடனக் கலைஞர் ராஜுவைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை முறைப்படி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.

   

வழக்கின் விவரங்கள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை ஆய்வு செய்த நீதிமன்றம், நடனக் கலைஞர் ராஜுவை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரைச் சிறையில் அடைத்து, தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.