அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், தந்தை ஒருவர் தவறுதலாக தனது 1 வயது பெண் குழந்தையை காரின் உள்ளே வைத்துப் பூட்டிவிட்டார். சாவியும் காரின் உள்ளேயே இருந்த நிலையில், வெப்பம் அதிகரித்ததால் பதற்றமடைந்த பெற்றோர் கதறியழுது உதவி கேட்டனர்.
அப்போது அருகில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த 5 கைதிகள் இதைக் கண்டு உதவ முன்வந்தனர். கார் திருட்டு வழக்குகளில் கைதான அனுபவம் கொண்ட அந்த கைதிகள், ஒரு சிறிய கம்பி கொக்கியைப் பயன்படுத்தி, வெறும் 5 நிமிடங்களில் கார் கதவைச் சேதமின்றித் திறந்து குழந்தையைப் பத்திரமாக மீட்டனர்.
சட்டவிரோதச் செயல்களுக்காகக் கற்றுக் கொண்ட திறமையைப் பயன்படுத்தி ஒரு பிஞ்சு குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய அந்தக் கைதிகளைப் பெற்றோரும் போலீசாரும் வெகுவாகப் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
