Categories: இந்தியா

“20 பாலியல் வன்கொடுமை… 18 கொலை வழக்குகள்…” சிறையில் ராஜ வாழ்க்கை வாழும் கைதி… திடீர் பரபரப்பு…!!

Spread the love

பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார மத்திய சிறை கர்நாடகாவின் பெரிய சிறப்பு சிறைகளில் ஒன்று. இங்கு கொலை வழக்குகளில் இருந்து ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் வரை பல குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் சிறையில் சிறப்பு வசதிகள் அளிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில் ரவுடி உமேஷ் ரெட்டியின் வீடியோ வெளியானது.

20 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 18 கொலை வழக்குகளில் குற்றவாளியான இவருக்கு முதலில் மரண தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்றம் 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையாக குறைத்த நிலையில் அவர் தற்போது பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த வீடியோவில் உமேஷ் ரெட்டி இரண்டு ஸ்மார்ட் போன்களுடன் அமர்ந்திருக்கும் காட்சி பதிவாகியுள்ளது. அவரது அறையில் டிவி உட்பட சொகுசு விடுதி போன்ற வசதிகள் இருப்பது தெரிகிறது. இது கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதே போல் நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய தருண் ராஜு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரும் சிறைக்குள் செல்போன் பயன்படுத்தி சமைக்கும் வீடியோ வெளியானது. ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வழக்கில் கைதான குற்றவாளியும் சிறைக்குள் செல்போன் பயன்படுத்தியுள்ளார். ஏற்கனவே நடிகர்கள், அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு சிறையில் சிறப்பு வசதிகள் அளிப்பதாக வழக்குகள் வந்துள்ளன. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Devi Ramu

Recent Posts

பழைய ஸ்டீல் கேட் இனி புதுசு போல மின்னும்…! துருவை நிமிஷத்துல நீக்கலாம்…! இதோ சில எளிய டிப்ஸ்….!!

வீட்டின் அழகைக் கூட்டும் ஸ்டீல் கதவுகள் மற்றும் பால்கனி கைப்பிடிகள், மழை மற்றும் தூசியால் துருப்பிடித்துப் பொலிவிழப்பதைத் தவிர்க்க எளிய…

5 minutes ago

நீச்சல் தெரியாதா? கவலையை விடுங்க.. தண்ணீரில் விழ நேர்ந்தால் உயிர் தப்ப உதவும் ‘மேஜிக்’ டிப்ஸ் வைரல்..!

நீச்சல் தெரியாதவர்கள் எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்தால், உயிர் பிழைப்பதற்கான எளிய மற்றும் மிக முக்கியமான நுட்பம் குறித்த வீடியோ…

6 minutes ago

ஒரே ஒருமுறை முதலீடு…. 2 லட்சம் வரை லாபம்…! 7.5% வட்டி தரும் போஸ்ட் ஆபீஸின் அசத்தலான திட்டம்….!!

தபால் நிலையத்தின் 'நேர வைப்புத் திட்டம்' (Time Deposit Scheme) முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் அதிக லாபம் தரும் வாய்ப்புகளை…

15 minutes ago

ஷாப்பிங் சென்ற இடத்தில் இப்படியா? ஊழியர் கண்ணெதிரிலேயே பெண் செய்த காரியம்… கேமராவில் சிக்கிய பகீர் காட்சி..!

நகைக்கடையில் ஷாப்பிங் செய்ய வந்த பெண் ஒருவர் கைவரிசை காட்டிய அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில்…

17 minutes ago

தயிரை இப்படிச் சாப்பிடுறீங்களா…? ஆபத்து…! கோடைக்காலத்தில் இதைப் படிச்சிட்டுச் சாப்பிடுங்க…! நிபுணர்கள் சொல்லும் அட்வைஸ்…!!

கோடைக்காலத்தில் குளிர்ச்சிக்காகத் தயிரை விரும்பிச் சாப்பிட்டாலும், அதனைச் சரியான முறையில் உட்கொள்ளாவிட்டால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் என நிபுணர்கள்…

21 minutes ago

மனிதநேயத்தை மிஞ்சிய அன்பு.. அழுதுகொண்டிருந்த சிறுமி… குரங்கு செய்த அந்த செயல்.. இணையத்தை நெகிழ வைத்த வீடியோ…!

அழுதுகொண்டிருக்கும் ஒரு சிறுமிக்கு குரங்கு ஒன்று ஆறுதல் கூறும் காட்சிகள் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தச் சிறுமி சோகமாக அழுது…

27 minutes ago