வெறும் ரூ.500 பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் வயல் வேலைக்குச் சென்ற மாணவி… நேரில் சென்று பள்ளி முதல்வர் செய்த நெகிழ வைக்கும் செயல்… மனதை கலங்க வைக்கும் வீடியோ…!

By Nanthini on மார்கழி 10, 2025

Spread the love

மனதை தொடும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது. வெறும் 500 ரூபாய் கட்டணம் செலுத்த முடியாததால் 15 நாட்கள் பள்ளிக்கு செல்ல தவறிய ஒரு பெண்ணின் கதையை தான் இந்த வீடியோ வெளிக்காட்டுகிறது. குடும்பத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் பள்ளிக்கு செல்வது இனி சாத்தியம் இல்லை என்று நினைத்த அந்தப் பெண் வருத்தத்துடன் இருந்துள்ளார். வேறு வழி இல்லாமல் அந்தப் பெண் தனது குடும்பத்திற்காக வயலில் வேலை செய்து வந்தார். இதனைத் தொடர்ந்து எந்த தயக்கமும் இல்லாமல் வயல்வெளிக்குச் சென்ற முதல்வர் சேற்றில் வேலை செய்து கொண்டிருந்த மாணவியை அழைத்து ஏன் பள்ளிக்கு வரவில்லை என்று கேட்டுள்ளார்.

உடனே அந்த சிறுமி வீட்டில் பணம் இல்லாததால் பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லை, அவமானம் தான் பள்ளிக்கு செல்ல விடாமல் தடுத்தது என்று தயக்கத்துடன் கூறுகிறார். இதனை கேட்டதும் பள்ளி முதல்வர், கட்டணம் இல்லாவிட்டாலும் படிப்பு தடைபடாது என்று உறுதி அளித்து கட்டணம் எதுவும் வசூலிக்க மாட்டேன் என்று கூறி சிறுமியை பள்ளிக்கு அழைத்துள்ளார். இதனைக் கேட்டதும் சிறுமி உணர்ச்சிவசப்பட்டு அழ தொடங்கினார். தலைமையாசிரியர் மாணவியை ஆறுதல் படுத்தி மறுநாள் பள்ளிக்கு வர சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.